சித்தியால் கதறி அழும் ஐஸ்வர்யா, தயங்கி நிற்கும் மூர்த்தி, கண்ணனுக்கு வந்த அடுத்த பிரச்சனை
சென்னை: கண்ணன் வீட்டிற்கு வரும் கதிர் கண்ணனை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்.
ஐஸ்வர்யாவை அவருடைய சித்தி திட்டுகிறார்.
மூர்த்தி வளைகாப்பு வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறிக் கொண்டு இருக்க மொத்த குடும்பமும் சமாதானப்படுத்துகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 25ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கண்ணன் வீட்டிற்கு கதிர் வந்து நிற்க, கண்ணன் நான் வீட்டில் இல்லை என்று சொல்லிருங்க இங்கு நடந்ததை சொல்ல வேண்டாம் என்று ஐஸ்வர்யாவின் சித்தி இடம் சொல்ல அவரும் அதுபோலவே முதலில் சொல்கிறார்.
ஆனால் வீட்டுக்குள்ளே சத்தம் கேட்கிறது.அதனால் கண்ணன் இங்கதான் இருக்கான்னு நினைக்கிறேன் என்று கதிர் சொல்ல பிறகு அதுதான் அவருக்கு எல்லாம் தெரிஞ்சு விட்டதே வெளியே வா கண்ணா என்று ஐஸ்வர்யாவின் சித்தி போட்டுக் கொடுக்க கண்ணன் வெளியே வந்து நிற்பதை பார்த்து கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
முகம் எல்லாம் காயத்தோடு கண்ணன் நிற்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கதிர் விசாரிக்க ஐஸ்வர்யாவின் சித்தி உன்னை வந்து அடிச்சிட்டு போனதை சொல்லு என்று நக்கல் பண்ண, கண்ணன் ஐஸ்வர்யாவை தப்பா பேசினதால தான் நான் அடிச்சேன். அதனால் அவங்களும் அடிச்சிட்டாங்க என்று மட்டும் சொல்கிறார்.
இதனால் கதிர் கண்ணனை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு யார் அந்த ஆபிஸர் காட்டு என்று தேடிப் போகிறார். அவர்கள் ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களிடம் முதலில் நியாயமாக பேசுகிறார். அதுவே பிறகு வாக்குவாதமாக மாற கடைசியில் கதிர் அவர்களை அடித்து விடுகிறார்.

வீட்டில் ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவை திட்டுகிறார். தனி குடித்தனம் போகப்போகிறேன் என்று சொன்னது இதுக்கு தானா? தனி குடித்தனம் வந்து நாலு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை லட்சம் கடனா? பேசாம அங்கேயே இருந்தா அவங்களே வளைகாப்பு பண்ணி இருப்பாங்க. உனக்கும் இத்தனை பிரச்சனை வந்து இருக்காது.
கல்யாணம் பண்ணுனதிலிருந்து நீதான் எல்லாம் முடிவு எடுத்திருக்க வளைகாப்புக்கு வாங்கின பணத்தை மட்டும் சரியா தந்துவிடு என்று திட்டுகிறார். ஐஸ்வர்யா அழுது கொண்டே இருக்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்வதற்காக தனம், முல்லை,, கதிர் என எல்லோரும் கிளம்பி கொண்டிருக்கின்றனர்.
அப்போது மூர்த்தி நான் வரவில்லை என்று சொல்ல எல்லோரும் சமாதானப்படுத்தி கொண்டிருக்கின்றனர். பிறகு மூர்த்தி போவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த நிலையில் நாளைக்கான எபிசோட்டில் கதிரை தேடி வீட்டிற்கு போலீஸ் வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications