கண்ணனை திட்டும் கதிர்..ஜனார்த்தனன் கேட்ட கேள்வி.. பீல் பண்ணும் ஜீவா.. பரபரப்பான தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கதிரை வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக தனம் தன்னுடைய நகைகளை கொடுத்து உதவுகிறார்.

ஆனால் அது வேண்டாம் என்று மூர்த்தி மறுத்து விடுகிறார்.

பிறகு விஷயம் தெரிந்த ஜனார்த்தனன் ஜீவாவிடம் பணத்தை கொடுத்து உதவுகிறார்.

Pandian Stores serial 2023 May 31th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 31ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் பணத்திற்காக மூர்த்தி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்க, அப்போது தனம் போன் பண்ணி அவசரமாக வீட்டுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார்.

பிறகு பணம் வேண்டும் அதற்காகத்தான் நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். இன்னைக்கு பேங்க் வேற லீவு அதனால்தான் எடுக்க முடியல என்று மூர்த்தி சொல்ல, நான் என்னுடைய நகை எல்லாம் தருகிறேன் என்று தனம் கையில் இருப்பதை எல்லாம் கழட்டி கொடுக்கிறார்.

அதுவெல்லாம் வேண்டாம் நான் எப்படியாவது வேற பணம் அரேஞ்ச் பண்ணி சாயங்காலத்துக்குள்ள கதிரை கூட்டிட்டு வந்துடுவேன் என்று மூர்த்தி கூறிவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக மீனா வீட்டில் மீனாவின் அம்மா ஜனார்த்தனன் இடம் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி சொல்கிறார். அப்போது ஜனார்த்தனன் ஜீவாவிடம் இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு நீங்க என்கிட்ட ஒண்ணுமே சொல்லல என்று கேட்கிறார்.

Pandian Stores serial 2023 May 31th promo and Episode Highlights

பிறகு அன்னைக்கு உங்க தம்பிய நான் பேசுனது அவமானப்படுத்தனுங்கறதுக்காக கிடையாது. இப்படி ஏதும் பிரச்சனை வந்திடக் கூடாது என்பதற்காகத்தான் நான் கேட்டேன். அதுக்காக நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டீங்களா? நீங்க எதுக்காக வேற ஒருத்தவங்க கிட்ட பணத்துக்காக அலைஞ்சிட்டு இருக்கீங்க என்று பணத்தை கொடுக்க இது வேண்டாம் நான் வேற ஒருத்தர்கிட்ட வாங்கி விடுவேன் என்று ஜீவா கூறுகிறார்.

மீனா வேண்டாம்பா நாங்க வேற ஆள்கிட்ட வட்டிக்கு கேட்டு இருக்கோம் என்று சொல்ல, ஜனார்த்தனன் நீ சும்மா இரு என்று மீனாவை திட்டி விட்டு நீங்க இங்க வேலை பார்த்ததுக்கு மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்றால் கூட நாலு லட்சம் வந்திருக்கும். நீங்க இன்னொருத்தங்க கிட்ட பணத்துக்காக நிற்க வேண்டாம். இப்போ இதை வச்சிக்கிட்டு கதிரை கூட்டிட்டு வாங்க முல்லை மாசமா இருக்கிற பொண்ணு அழுதுகிட்டு இருக்கும் என்று கூறுகிறார்.

பிறகு எனக்கு ஒன்னுனா உங்க குடும்பத்துல வந்து எல்லாரும் நிக்க தானே செய்றாங்க. என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் நீங்க யாரும் ஒதுங்கி நிற்கவில்லையே. இது என் பணம் இல்ல, நம்ம பணம். இதை பிடிங்க என்று ஜீவா கையில் கொடுத்து அனுப்புகிறார். ஜீவா ஜனார்த்தனின் கையைப் பிடித்து இந்த பணத்தை நான் கண்டிப்பா திரும்பி கொடுத்து விடுவேன் இந்த உதவியை மறக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

பிறகு மாப்பிள்ளை பணத்துக்கு வேற ஆளு கிட்ட ரெடி பண்ணிட்டு இருக்காரு நீயும் பார்த்துகிட்டு இருக்க என்று மீனாவை ஜனார்த்தனன் திட்டுகிறார். அடுத்ததாக ஜெயிலில் கதிர் ஃபீல் பண்ணியபடியே இருக்க கண்ணன் கதிரிடம் சாரி அண்ணா என்று பேச, இதையே எத்தனை தடவை சொல்லிக்கிட்டு இருக்க, நீ வீட்டுக்கு போ என்று சொல்ல, போலிஸ் உன்னை அடிக்கலாம் மாட்டாங்கலா என்று கண் கலங்குகிறார்.

Pandian Stores serial 2023 May 31th promo and Episode Highlights

பிறகு போலீஸ் அதிகாரியிடம் கண்ணன் சார் எங்க அண்ணன் பாவம் சார் எனக்காக தான் சார் இதெல்லாம் பண்ணுனாங்க. வேணும்னு அடிக்கல சார் என்று சொல்ல, உங்க அண்ணன் வேணும்னா அடிக்கலனா கூட பரவாயில்லை. ஆனால் உனக்கு எல்லாம் அண்ணனா இருக்குது அது சரியே இல்லை என்று திட்டுகிறார்.

பிறகு அண்ணனுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாமா என்று கண்ணன் கேட்க வாங்கி கொடு என்று சொன்னதும் கையில் இருக்கும் பணத்தை எடுத்து பார்த்தபடி போகிறார். இதை பார்த்து கதிர் ஃபீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+