பில் கட்ட பணம் இல்லாமல் தவிக்கும் கண்ணன்..திட்டும் கதிர்..மூர்த்தி பற்றிபேசிய மீனா..திடீர் திருப்பம்
சென்னை: மருத்துவமனையில் பில் கட்டுவதற்கு பணம் இல்லாமல் கண்ணன் தவிக்க ஐஸ்வர்யா உதவ முடியாது என்று கூறுகிறார்.
மூர்த்தி அண்ணன் வரவில்லையா என்று கேட்ட கண்ணனை கதிர் திட்டுகிறார்.
மீனா தன்னுடைய அப்பாவிடம் மூர்த்தி பற்றி பேசுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 4ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் மீனா ஜீவாவை தன்னுடைய அப்பா திட்டியதற்காக திட்டுகிறார். இதனால் கடுப்பான மீனாவின் அம்மா நீ எதுக்கு இப்போ இப்படி கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க, அதற்கு மீனா மூர்த்தி மாமா கூட ஜீவா கிட்ட கேட்டு தான் முடிவு எடுப்பார். நீங்க இப்படி பண்ணிட்டீங்களே அங்க நிம்மதி இல்லைன்னு இங்க வந்தா இங்கேயும் எங்களை திட்டிக்கிட்டு இருக்கீங்க என்று கூறுகிறார்.

பிறகு மருத்துவமனைக்கு தனம் வந்து ஐஸ்வர்யாவை பார்க்கிறார். அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு உடம்பு சரியில்லை என்பது அண்ணனுக்கு தெரியும் தானே, அண்ணனும் வந்திருக்கலாம் என்று சொல்ல, கதிர் அண்ணன் மட்டும் இறங்கி வரணுமா? நாம பெரியவங்க என்கிற மரியாதை இல்லாம என்ன வேணாலும் பேசி திட்டிகிட்டு வந்திரனும், ஆனா நமக்கு ஒன்னுனா அவங்க மட்டும் இறங்கி வரணும் இது என்ன நியாயம் என்று கண்ணனை திட்டுகிறார்.
அடுத்ததாக ஐஸ்வர்யாவை ஜீவாவும் வந்து பார்க்க, அப்போது தனம் காபி கொடுக்க அதை குடிக்கும்போது ஐஸ்வர்யாவின் சித்தி அங்கே வந்து விடுகிறார். பிறகு அண்ணன் தம்பிகளுக்குள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் ஒரு பிரச்சனை என்றால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் சேர்ந்திடும் என்பது உண்மைதான் போல என சொல்ல தனம் சந்தோஷப்படுகிறார்.

ஜீவா கிளம்பும்போது கதிர் தனியாக அழைத்து சென்று ஜீவாவிடம் நீ நல்லா இருக்கியா என்று கேட்க, ஜீவா சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு மருத்துவமனையில் பில் கட்ட வேண்டும் என்று சொன்னதால், கண்ணன் தன்னுடைய பணம் வீட்டில் இருக்கிறது என்று வீட்டில் போய் எடுத்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். வீட்டிற்கு சென்று பணத்தை எல்லா இடமும் தேடி பார்த்து பணம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு போன் பண்ணி நகை கேட்கிறார்.
நீ எனக்கு முதல் முறையா வாங்கி தந்த நகை அதை நான் தரமாட்டேன். ஏன் கண்ணா உங்க வீட்டில கட்ட மாட்டாங்களா? என்று ஐஸ்வர்யா கேட்கிறார். அதற்கு கண்ணன் இல்லை பணம் கட்டினால் தான் வீட்டை விட்டு போக முடியும் என்று சொல்லியும் நகையை கொடுக்க மறுக்கிறார். கண்ணன் ரொம்ப நேரமா வரவில்லை என்றதும் கதிர் ஐஸ்வர்யாவிடம் சென்று விசாரிக்கிறார். அப்போது பணம் இல்லை என்ற விஷயத்தை அவருடைய சித்தி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications