பணம் இல்லாமல் அண்ணனை புரிந்து கொள்ளும் கண்ணன்..அவமானப்படுத்தும் ஐஸ்வர்யா.. திட்டும் மீனா
சென்னை: கையில் பணம் இல்லாததால் மளிகை பொருட்கள் வாங்கும் போது தன்னுடைய அண்ணனின் அருமைகளை கண்ணன் புரிந்து கொள்கிறார்.
கண்ணனிடம் பணம் இல்லாததை தெரிந்துகொண்டு ஐஸ்வர்யா கோபப்படுகிறார்.
மீண்டும் ஜீவாவை அவமானப்படுத்தும் ஜனார்த்தனனை மீனா திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 6ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவுக்காக மட்டன் வாங்க கடைக்கு போன கண்ணன் விலையை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பிறகு அரை கிலோ மட்டன் வாங்கிவிட்டு போகலாம் என்று முடிவு எடுத்துவிட்டு மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்க போகிறார். அங்கும் மருந்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணன் மருந்தையும் குறைத்து வாங்குகிறார்.
இத்தனை நாட்களாக நம்ம வீட்டில் சாப்பிட்டிருக்கோம். ஆனா கறியின் விலை எவ்வளவு என்பது நமக்கே தெரியாது என்று பீல் பண்ணியபடியே வீட்டிற்கு வந்த கண்ணனிடம் கறி குறைவாக இருக்கே என்று ஐஸ்வர்யாவும், ஐஸ்வர்யாவின் சித்தியும் கேள்வி கேட்க, பிறகு பாண்டியன் ஸ்டோர் வீட்டு குடும்பமே இப்படித்தான் ரொம்ப கஞ்சத்தனம் புடிச்சவங்க என்று ஐஸ்வர்யாவின் சித்தி அவமானப்படுத்துகிறார்.
அதற்கு கண்ணன் எங்க அண்ணன் வாராவாரம் மட்டன் வாங்கும் எங்க குடும்பம் கஞ்சத்தனம் இல்லை. இன்னைக்கு இதை சமைங்க நாளைக்கு வாங்கி தரேன் என்று சமாளிக்கிறார். பிறகு தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லவும் ஐஸ்வர்யா அதை புரிந்து கொள்ளாமல் கண்ணனிடம் கோபித்துக் கொண்டு போ கண்ணா என்று கிளம்பி போகிறார்.

அதே நேரத்தில் மீனாவின் வீட்டில் மீனாவின் அப்பா ஜீவா தன்னுடைய கடையை நல்லா பார்த்துக் கொள்வதாக மீனாவிடம் சொல்லி பாராட்ட மீனா ஜீவாவை நினைத்து சந்தோஷப்படுகிறார். தொடர்ந்து அரிசி வாங்கும் நபரால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். நல்லவேளை அன்னைக்கி மாப்பிள்ளை முடிவு எடுத்தாரு அதனால நாம தப்பிச்சுட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஜீவா அவர் மட்டுமல்ல பருப்பு வாங்கி கொண்டு இருக்கும் நபரும் அப்படிதான் என்று சொல்ல, நான் செய்யும் பிசினஸை நீங்க குறை கண்டுபிடிக்காதீங்க. ஒருத்தர் தப்பு பண்ணிட்டாங்கன்னா எல்லாரும் அப்படித்தானு இல்லை. இவர் ரொம்ப நல்ல மனுஷன் என்று சொல்லி, எது செய்வது என்றாலும் என்னிடம் கேட்டுட்டு செய்ங்க என்று சொல்ல, ஜீவா கோபித்துக் கொண்டு உள்ளே கிளம்பி செல்கிறார். அதனால் கடுப்பான மீனா அவருடைய அப்பாவையும் அம்மாவையும் திட்டுகிறார்.

அடுத்து தனம் யோசித்துக் கொண்டு இருக்க முல்லை என்னாச்சு என்று கேட்க, ஐஸ்வர்யாவை நினைச்சு தான் கவலையாய் இருக்கு என்று தனம் சொல்ல, நீங்க கவலைப்படாதீங்க அவ நல்லா இருக்கிறா, இப்பதான் அவ போட்ட வீடியோவை பார்த்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டு தனம் மகிழ்ச்சி அடைகிறார்கள். எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications