5 வருஷம் ஆகிடுச்சு.. கல்யாணமானதை வெளியே சொல்லாத காரணமே இதுதான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இதை இத்தனை வருடங்களாக வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் எல்லோருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டினாலும் தங்க மயிலை மட்டும்தான் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இவர் நல்லவரா? கெட்டவரா? என்று ரசிகர்கள் யூகிக்க முடியாத வகையில் தான் இவருடைய கேரக்டரே இருக்கிறது.

ஆரம்பத்தில் ரவுடி போல அறிமுகமான தங்கமயில் தான் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று வீட்டிற்குள் குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாண்டியனின் அதிகமான ஆசையால் தங்கமயில் குடும்பத்தினர் அடுத்தடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய குட்டு எப்போது உடைய போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் தங்கமயில் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சரண்யா தோடி தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதை சமீபத்தில் வரலட்சுமி பூஜையின் போது சரண்யா தன்னுடைய கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு வரலட்சுமி பூஜையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்தபிறகு தான் இவருக்கு கல்யாணம் ஆனதே பலருக்கு தெரியும். அது குறித்து கேள்விகளுக்கு சரண்யா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நானும் என்னுடைய கணவர் ராகுலும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்தோம்.

நீ இல்லை என்றால் நான் இல்லை, நான் இல்லை என்றால் நீ இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் எங்களுடைய காதல் இருக்கிறது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலும் எங்களால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் எங்களுடைய திருமண செய்தியை வெளியே சொன்னது கிடையாது. அதற்கு காரணம் நான் என்னுடைய பர்சனல் வாழ்க்கையை எதையுமே வெளியே சொன்னது இல்லை. அது போல தான் என்னுடைய திருமணத்தை பற்றியும் சொல்லவில்லை.

சமீபத்தில் எனக்கு வரலட்சுமி பூஜை கொண்டாடனும் போல இருந்ததால் அந்த பூஜையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டேன். அதற்கு பிறகு தான் பலருக்கும் எனக்கு கல்யாணம் முடிந்த செய்தி தெரியும். ஆனால் அதற்கு முன்பே நான் என்னுடைய கணவரோடு அடிக்கடி புகைப்படங்களும் ரிலீஸ் வீடியோக்களும் வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அது குறித்து சிலருக்கு சந்தேகம் இருந்தது.

ஒரு சிலர் தொடர்ச்சியாக உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதற்கு ஆமாம் என்றும் சொன்னது கிடையாது, இல்லை என்று சொன்னது இல்லை. காரணம் என்னுடைய பர்சனல் வாழ்க்கை பர்சனல் ஆக இருக்கட்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதுபோல என்னுடைய கணவர் மட்டும் இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு வந்திருக்கவே முடியாது.

அவர்தான் நான் உடைந்து போன நேரங்களில் எல்லாம் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உயர்த்தி கொண்டே இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்தேன் அதற்கு பிறகு இப்போது நடிகையாகவும் மாறி இருக்கிறேன். இன்னும் என்னுடைய வாழ்க்கையில் கடைசி காலம் வரைக்கும் என்னுடைய ராகுல்தான் எனக்கு துணையாகவே வரவேண்டும் என்று அந்த பேட்டியில் சரண்யா காதலோடு பேசியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications