மீண்டும் மாஸ் காட்டிய பாண்டியன் ஸ்டோர்.. ஒருவழியா விட்ட இடத்தை பிடிச்சாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவினால் மீண்டும் முதல் இடத்திற்கு வந்துவிட்டது.

மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் சீரியல் டீம் அதற்கு கேக் வெட்டி கொண்டாடி சும்மா ரகளை பண்ணி விட்டார்கள்.

இவ்வளவு நாளாக முதலிடத்தில் இருந்த பாரதிகண்ணம்மா சீரியலையே பின்னுக்கு தள்ளிவிட்டது... எல்லாத்துக்கும் காரணம் இந்த கண்ணன் ஐஸ்வர்யாவின் திருமணம் தான்.

இதுவும் வேற லெவல் வெற்றிதான்

இதுவும் வேற லெவல் வெற்றிதான்

அடடா இதுவரைக்கும் போட்டி வேற சேனல் கூடனு தான் நினைத்துக் கொண்டிருந்தால் இப்போ விஜய்டிவிக்குள்ளேயே பெரிய போட்டி நிலவுகிறது. எந்த சீரியல் டிஆர்பி யில் முதல் இடத்தில் வருகிறது என்று சீரியலுக்குள் மட்டுமல்லாமல் சீரியல் ரசிகர்களுக்கு இடையேயும் பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருப்பங்கள் கொடுத்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதல் இடத்தை பிடித்து விட்டது. அதை பார்த்ததும் அந்த சீரியல் டீம் மட்டுமல்லாமல் சீரியல் ரசிகர்களும் ரொம்பவே ஹாப்பி ஆகிவிட்டனர். தங்களுடைய ஆதரவுக்கு கிடைத்த வெற்றியாக தான் இதனை பார்க்கின்றனர். அதனால் தான் இந்த சீரியலுக்கு சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

ஒரு கல்யாணத்துக்கு இத்தனை அக்கப்போரா

ஒரு கல்யாணத்துக்கு இத்தனை அக்கப்போரா

பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமையை மையமாக எடுத்துக் இருந்தாலும் இந்த சீரியலில் தற்போது புதுசு புதுசாக திருமண வைபோகம் , வளைகாப்பு வைபவங்களையும் பெரிய அளவில் எடுத்து சீரியலை பிரபலப்படுத்தி வருகின்றனர். அதுவும் ஒவ்வொரு பங்ஷனுக்கும் பல விஜய் டிவி செலிபிரிட்டிஸ் வந்து பங்ஷனை சிறப்பித்துக் வருகின்றனர். இதனை அடிக்கடி ப்ரோமோவில் போட்டு சீரியலை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டி விடுகின்றனர். இதனாலேயே இந்த சீரியலின் டிஆர்பி அடிக்கடி எகிறிவிடும். இதுவரைக்கும் அடிக்கடி சந்தோஷமான பிரோமோகளை வெளியிட்டு வந்தாலும் இந்த வாரம் பெரிய திருப்புமுனையாக கண்ணன் திருமணத்தை வைத்தே பிரோமோவை தெறிக்க விட்டு விட்டனர்.

வெறுத்தாலும் மனதில் வஞ்சனை இல்லை

வெறுத்தாலும் மனதில் வஞ்சனை இல்லை

அதுவும் கோவிலில் சிம்பிளாக முடிந்த கண்ணனின் கல்யாணத்தை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஷாக் ஆகி விட்டனர். படிக்கிற வயதிலேயே திருட்டு கல்யாணம் ஆயிருச்சு என்று கண்ணனின் குடும்பம் கதறியதைவிடவும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே இந்த எபிசோடுகள் ரசிகர்களிடம் நன்றாகவே ரீச் ஆகிவிட்டது. கண்ணனைத் திட்டி தீர்ப்பதற்காக ஒரு கூட்டம் சீரியலை பார்த்து வந்தது என்றாலும், அவருக்கு சப்போர்ட் செய்யும் இன்னொரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே காதலித்து வீட்டில் உள்ளவர்களுக்காக தியாகம் செய்து மணவறையில் உட்கார்ந்து இருந்த ஜீவா நல்லவர் கடைசி நேரத்தில் மீனா வந்து பிரச்சனை பண்ணி அவர் திருமணம் செய்தால் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் குடும்பம் கண்ணனுக்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டுகிறது என்று மீம்ஸ் களும் பறந்து வருகிறது.

மீம்ஸ்கள் பறக்குதே

மீம்ஸ்கள் பறக்குதே

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் அதேபோலத்தான் மீம்ஸ்களால் வேற லெவல் வைரல் ஆகி விட்டது. அதை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலும் மீம்ஸ்களால் தெறிக்க விட்டு வருகிறது. சீரியல் ப்ரோமோ ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ மீம்ஸ்கள் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனாலேயே இந்த எபிசோடுகளை வெறிகொண்டு ரசிகர்கள் பார்த்தனர். அதுவும் சூரிய வம்சம் படத்தில் வருவது போல செண்டிமெண்ட் சீன்களுக்கும் இந்த வார எபிசோடுகளில் பஞ்சமில்லை.

செம கொண்டாட்டம்தான்

செம கொண்டாட்டம்தான்

எது எப்படியோ இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் செம்ம வைரல் ஆகி மீண்டும் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. ஏற்கனவே தனத்தின் வளைகாப்பு பங்க்ஷனோடும் இதேபோலத்தான் இந்த சீரியல் முதலிடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் சரிவடைந்தாலும் மீண்டும் முதல் இடத்திற்கு வந்துவிட்டது.அதுவும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் முக்கிய திருப்புமுனை களால் ஏற்பட்ட விறுவிறுப்பு காரணமாக பாரதிகண்ணம்மா வை பின்னுக்குத்தள்ளி பாண்டியன் ஸ்டோர் 12.4 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சந்தோசத்தை கொண்டாடும் பொருட்டு சீரியலின் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் அந்த வீடியோவில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மட்டும் இல்லையே!!??என்றுதான் பலரும் கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+