பாண்டியன் ஸ்டோர் மீனா கட்டிய புது வீடு..இத்தனை வசதிகள் இருக்கிறதா? அட இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனி வீடு இல்லாமல் தவித்து வரும் மீனா நிஜ வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பல வருடங்களாக போராடி ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்.
தன்னுடைய வீட்டின் வேலைகள் முடிந்து விட்டது என்று கூறி ஹேமா வெளியிட்ட வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் திரைப்பட நடிகைகளை விட சின்னத்திரையில் மனங்கவர்ந்த கேரக்டரில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த மாதிரி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமாவிற்கும் அதிகமான வரவேற்பு இருக்கிறது.
இவர் சீரியலில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் ஹேமா தன்னுடைய சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களையும் ஹோம் டூர் வீடியோக்களையும் வெளியிட்டு அடிக்கடி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறார்.

அந்த மாதிரி தான் தற்போது பல வருடங்களாக தான் கட்டிக் கொண்டிருந்த தன்னுடைய சொந்த வீட்டின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 90% முடிவடைந்த தன்னுடைய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ரெடியாகிவிட்டது என்று அவர் மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆரம்பத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் பெற்று வந்த மீனாவிற்கு இப்போது வரவேற்பு அதிகமாகி ரசிகர்கள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருவரை பிடித்து விட்டால் அவர்கள் என்ன செய்தாலும் அதை பலரும் பாராட்டுவார்கள். அந்த மாதிரி தான் கஷ்டப்பட்டு வீடு கட்டி வரும் பலருடைய கனவுகள் மற்றும் ஏக்கங்களை குறித்து அடிக்கடி ஹேமா தன்னுடைய வீடியோவில் பேசி வரும் நிலையில் இப்போது ஹேமா வீட்டு கிரக பிரவேசம் விரைவில் வர இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்கள் பலர் தங்களுடைய சொந்த வீடு வேலை முடிந்தது போன்று மகிழ்ச்சி அடைந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வீடியோவில் ஹேமா தன்னுடைய வீட்டின் கிச்சன், பூஜை அறை, பாத்ரூம், குளிக்கும் இடம் என அனைத்து இடங்களையும் பற்றி விரிவாக விளக்கிக் கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனக்கு ஒரு அட்டாச் பாத்ரூம் வேண்டும் என்று பல வருடங்களாக கெஞ்சி கொண்டிருக்கும் மீனா தன்னுடைய நிஜ வீட்டில் அமைத்திருக்கும் அட்டாச் பாத்ரூமை குறித்தும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்னொரு வீடியோவில் தன்னுடைய மகன் தான் பாத்ரூம் போன நேரத்தில் எப்படி அழுது கொண்டு அடம்பிடிக்கிறார் என்றும், தன்னை பார்த்ததும் பாத்ரூம் கூட விடாமல் உள்ளே வந்து விளையாடிக் கொண்டிருப்பதை குறித்தும், இதுதான் பல அம்மாக்களின் நிலமையாக இருக்கிறது என அவர் வெளியிட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications