பாண்டியன் ஸ்டோர்ஸ் "மீனா” வீட்டில் அடுத்தடுத்த விசேஷம்.. இன்னைக்கு "ஸ்பெஷல்” நாள்..குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா சதீஷ் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதிகமாக வரவேற்பு கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல்தான்.

 Pandian Stores serial Meena birthday photos released

இந்த நிலையில் ஹேமாவுக்கு இன்று பிறந்தநாள் அதை சிறப்பாக கோவிலுக்கு சென்று கொண்டாடி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு சிலர் தான் சீரியலில் நடிக்கும் கேரக்டர்களின் படியே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் சமீப காலமாக அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயராக பாண்டியன் ஸ்டோர் மீனா மாறிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரை பலர் வெறுத்திருந்தாலும் இப்போது மீனாவை பலர் ரசிக்க தொடங்கி இருக்கின்றனர்.

 Pandian Stores serial Meena birthday photos released

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எந்த இடத்திலும் தனக்கான உரிமை வேண்டும் என்று போராடும் ஒரு கேரக்டராக, அதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் எதார்த்தமான கேரக்டராக தான் மீனா கேரக்டர் இருந்து வந்தார். அதனாலேயே இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் ஹேமா என்பது கூட பலருக்கும் இப்போ வரைக்கும் தெரியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மீனாவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகை ஹேமா சீரியலை விடவும் நிஜத்திலும் பல பெண்களுக்கு ரோல் மாடலாகவும் மாறி இருக்கிறார். காரணம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எந்த அளவிற்கு வருத்தப்படுவார்கள் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் ஒரு நடிகை என்றால் அவர்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ஆனாலும் தன்னுடைய நடிப்பு குழந்தை, குடும்பம் என அனைத்தையும் சமாளித்தபடி ஹேமா சாதித்துக் கொண்டிருக்கிறார்.

 Pandian Stores serial Meena birthday photos released

கொரோனா காலகட்டத்தில் கர்ப்பமாக இருந்த ஹேமா தொடர்ச்சியாக சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் குழந்தை பிறந்த ஒரு சில வாரங்கள் மட்டுமே இவர் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடங்கி விட்டார். பலர் குழந்தை பிறந்ததும் நடிப்பை விட்டு விடுவார்கள். ஆனால் இவர் குழந்தையையும் கவனித்துக் கொண்டு நடிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் தன்னுடைய பல வருட கனவாக சொந்த வீட்டையும் இப்போது வெற்றிகரமாக கட்டி முடித்து இருக்கிறார்.வீடு கட்டுவது ஒன்றும் எளிதான காரியம் அல்ல என்பதை அடிக்கடி ஹேமா தன்னுடைய youtube சேனல் பக்கத்தில் தெரிவித்துக் கொண்டிருப்பார். வீடு கட்டுவதற்கு தேவையான பணம் கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களாக தனக்கு பிடித்த வீட்டை இப்போதுதான் கட்டி முடித்திருக்கும் ஹேமா வீட்டு கிரகப்பிரதேசத்தை எளிமையாக முடித்திருக்கிறார்.

 Pandian Stores serial Meena birthday photos released

அதை தன்னுடைய youtube சேனலில் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இன்று அவருடைய பிறந்தநாள். அதற்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டபடி ஒரு சில புகைப்படங்களை மட்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+