அச்சச்சோ பாண்டியன் ஸ்டோர் மீனாவுக்கு என்ன ஆச்சு..!காலில் இவ்வளவு பெரிய காயம்?உருக்கமான வேண்டுகோள்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் சுடுதண்ணீர் வைக்கும் போது தன்னுடைய காலில் தெரியாமல் ஊற்றியதால் காலில் அதிகமான இடம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் அவதிப்படும் மீனா உருக்கமான வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக மீனா கேரக்டரில் நடிகை ஹேமா அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வில்லியாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டர் தான் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் கேரக்டர் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

காரணம் இவர் குழந்தைத்தனமாக கேட்கும் கேள்விகளாக இருந்தாலும் சரி, தனக்காக போராடும் போராட்டமாக இருந்தாலும் சரி, அது பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தில் ஒரு பணக்கார வீட்டுப் பெண் மருமகளாக வந்து தன்னுடைய கணவருக்காக பல அட்ஜஸ்ட்மெண்ட்களை செய்து கொண்டிருப்பது தான் இந்த மீனாவாக அனைவருக்கும் தெரிகிறார்.
மீனா கேட்கும் கேள்விகள் எல்லாம் சரிதானே என்று பலரும் இப்போது பாராட்டி வந்தாலும், ஆரம்பத்தில் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் கோபமாக இருக்கிறது என்று திட்டியவர்கள் தான். அதுவும் ஜீவா மற்றும் முல்லைக்கு திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் மண்டபத்தில் வந்து திருமணத்தை நிறுத்தியதால் மீனாவை அதிகமான ரசிகர்கள் திட்டினார்கள். ஆனால் இப்போது தலைகீழா நிலைமை மாறி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஹேமா தன்னுடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சுடுதண்ணீர் வைக்கும் போது தன்னுடைய கை தவறி அந்த தண்ணீர் முழுக்க தன் மேலே சிந்தி விட்டதாம். அதிலும் அதிகமாக தன்னுடைய கால் பாதங்களை பாதித்திருக்கிறது. அதனால் செருப்பு போட முடியாமலும், நடக்க முடியாமலும் ஹேமா தவித்துக் கொண்டிருக்கிறார். அதை தன்னுடைய youtube சேனல் பக்கமாக பகிர்ந்து யாரும் இந்த தப்ப பண்ணாதீங்க ரொம்ப கவனமா வேலை பாருங்க என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
காலில் காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி விரைவில் சரியாகிவிடும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் சீக்கிரமாக இவருடைய உடல்நிலை மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்றும் பலர் வேண்டிக் கொள்வதாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications