Pandian Stores Serial: இந்த பாப்பாவை வச்சுக்கிட்டுத்தான் இம்புட்டு பில்டப்பா?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்கணும்னா ரொம்ப ஜாலியா குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கலாம்ங்க.
எந்தவித பொறாமை, காழ்ப்புணர்ச்சி இதனால் வரும் சண்டைகளை மிகைப் படுத்தி காண்பிக்காத தொலைக்காட்சி தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது.
துபாயிலிருந்து அக்காவும், அக்கா பொண்ணும் வர்றாகன்னும் கதிர் மாமா கதிர் மாமான்னு பாப்பா உசிரா இருக்கும்னும் வீடே பேசிக்கறாக. முல்லைக்கு பொஸசிவ் வந்துருது.

அள்ளிக் கொட்டி
பாப்பாவுக்கு பாயாசம்னா ரொம்ப புடிக்கும்... பாயசம் ரெடி பண்ணியாச்சான்னு கேட்கிறான் கதிர்.அதெல்லாம் ரெடி பண்ணியாச்சுங்க. என்ன இன்னிக்கு அதிசயமா கிச்சன் பக்கம் வந்து இருக்கீகன்னு கேட்கறா. இன்னிக்கு ஸ்பெஷல் டே இல்லே..என்று கண்ணடிச்சுட்டு எல்லா சரியா செஞ்சு இருக்கீங்களான்னு பார்க்க வேணாமான்னு கேட்கறான். அதுக்காகவே பாயசத்தில் உப்பை அள்ளிக் கொட்டுகிறாள் முல்லை.

வேணாம் காபி
முல்லை எல்லாருக்கும் காபி கொடுத்துவிட்டு கதிருக்கு காபி கொடுக்க..வேணாம்.. வேணாம் என்கிறான் கதிர்.என்னடா இவுகளுக்கு வந்த வாழ்வு என்பது போல முகத்தை காமிக்கிறாள் முல்லை. அவன் இப்படியும் அப்படியும் நடந்துக் கொண்டு இருக்க..என்னடா இங்கிட்டு அங்கிட்டு நடக்கறே.. அவ்ளோ தூரம் வரவங்களுக்கு வீட்டுக்கு வர தெரியாதான்னு கேட்கிறார் அண்ணன்.

வந்தாச்சு பாப்பா
பாப்பா வந்தாச்சு..அண்ணே அண்ணி வாங்கன்னு கத்தறான் கடைக்குட்டி தம்பி.எல்லாரும் ஓடிப்போய் பார்க்க,கொல்லையில் வண்டியைத் துடைத்துக் கொண்டு இருந்த கதிர், அங்கு நடந்து சென்று கொண்டு இருந்த முல்லையை ஒரு இடிஇடித்துவிட்டு ஓடுகிறான். முல்லைக்கு ஏகப்பட்ட கோவம். அக்கா முதலில் வீட்டுக்கு வந்தாச்சு..இன்னும் பாப்பா வரலை.

பாப்பா எங்கடா?
பாப்பா எங்கடான்னு கடைக்குட்டி தம்பியைக் கேட்க.. அவ கதிர் அண்ணன்கிட்டே பேசிகிட்டு இருப்பா. அவ வர்ற வழி பூரா கதிர் மாமா கதிர் மாமான்னுதான் பேசிகிட்டு வந்தான்னு அக்கா சொல்றாங்க.இன்னும் ஆவல் முல்லைக்கு எகிற எட்டிப் பார்த்தால் குட்டி பாப்பாவுடன் வர்றான் கதிர்.
இந்த பாப்பாவை வச்சுக்கிட்டுத்தான் இம்புட்டு பில்டப்பான்னு தலையில் அடிச்சுகிட்டு, தன்னைத் தானே கடிந்துக் கொள்கிறாள் முல்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications