Pandian stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ்.. மவுன ராகம் ஆகும்னு பார்த்தா இப்படி ஆகிப்போச்சே!
சென்னை: முல்லை கதிர் ரெண்டு பேரும் மனசுக்குள் கொள்ளை ஆசையை வச்சுக்கிட்டு, இப்போ பிரிவுல இருக்காங்க. சரி மவுன ராகம் மாதிரி முல்லை மனசில் இருப்பதை கடைசியில் சொல்லிடுவான்னு பார்த்தா இப்படி ஆகிப்போச்சே!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் முல்லை கதிர் ரெண்டு பேரும் எலியும் பூனையுமாகத்தான் இருந்தாங்க. கடைசியில் நல்லா புரிஞ்சுகிட்டு பேச ஆரம்பிச்ச சமயத்தில் சின்னதா மிஸ்டேக்.
அது என்னடான்னா நான் எங்க வீட்டுக்கு போறேன்னு முல்லை சொல்லும் அளவுக்கு ஆகிப் போச்சு.என்னத்த சொல்ல?

கூட்டு குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டும்தான் ரொம்ப சாஃப்டான குடும்ப அமைப்பில் ரொம்ப ஜோரா போயிகிட்டு இருக்குது. கூட்டு குடும்பம்னா இப்படித்தான் இருக்கணும். ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாக இருக்கணும்னு ரொம்ப அழகா எபிசோடை கொண்டு போறாங்க.

கதிர் முல்லை
குடும்பமே கதிரும் முல்லையும் சந்தோஷமா இருக்கணும்னு பாடு படறதும், சின்னஞ் சிறுசுகள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமா ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொள்வதும் என்று ஒரு எளிமையான கவிதை போல கொண்டு போயி இருந்தாங்க.

என்னாச்சோ ஏதாச்சோ
இருவருக்கும் இடையே என்னாச்சோ ஏதாச்சோ எனும் அளவுக்கு சின்ன கோடு விழுந்துவிட, முல்லை தன்னை கதிருக்கு பிடிக்கலையோன்னு நினைச்சு அம்மா வீட்டுக்கு போறேன்னு முடிவெடுக்கறா. இவனோ இவளுக்கு தன்னை பிடிக்கலை போல என்று பட்டுன்னு சரி சொல்லிடறான்.

ஓகே சொல்லிடறதா
வீட்டுக்கு போறேன்னா உடனே ஓகே சொல்லிப்புட்டான்னு முல்லையும், மனசு மாறி இருக்கவான்னு கேட்க மாட்டாளான்னு கதிரும், ஏக்கத்தில் இருக்காங்க. வண்டியில் போகும்போது அப்படியே வீட்டுக்கு வண்டிய திருப்புன்னு சொன்னால் நான் உடனே திருப்பிட மாட்டேனான்னு கதிர் நினைக்க, வீட்டுக்கு வந்துரு முல்லைன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியான்னு முல்லையும் நினைக்கறா..
கடைசியிலயாவது மவுன ராகம் ரேவதி மாதிரி முல்லை பேசி கதிர் கூட வீட்டுக்கு வந்துருவான்னு பார்த்தால் அதுதான் நடக்கலை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications