Pandian stores serial: படம் மாதிரிதான் இருக்கு... பட் நல்லாருக்கே!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல், அக்மார்க் குடும்ப சீரியல், எந்தவித டென்ஷனும் இல்லாமல் இந்த சீரியலை குடும்பமாக உட்கார்ந்து பார்க்கலாம்.
குடும்ப ஒற்றுமை,, அண்ணன் தம்பி ஒற்றுமை இவைகளை மிக நேர்த்தியாக சின்ன சின்ன சம்பவங்களுடன் சீரியலாக படம் பிடித்து இருப்பது பார்க்க இதமாக இருக்கிறது.
விரோதம், குரோதம் என்றால் கூட அதையும் மிகைப் படுத்தி காண்பிக்காமல், பட்டும் படாதது போல காண்பித்து இருப்பதும் மிக நன்றாகவே இருக்கிறது. மொத்தத்தில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எந்தவித குறையும் இல்லை.

படம் ஆனந்தம்
ஆனந்தம் திரைப்படம் போல அண்ணன் தம்பிகள் கதை. வீட்டுக்கு வந்த மருமகள்கள் தனம், முல்லை, மீனா என்று இவர்கள் காக்கும் குடும்ப ஒற்றுமை, மாமியாரை கரிசனத்துடன் பார்த்துக் கொள்வது என்று அனைத்தும் பல பெண்களை கவரும் விதமாக இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. குடும்ப சீரியலாகவும் மிளிர்கிறது.

ஜெயிலில் கண்ணன்
கடைக்குட்டி தம்பி கண்ணன் செய்யாத தவறுக்காக போலீசாரால் பிடித்து செல்லப்பட்டு, அடி உதை என்று கஷ்டப்பட, குடும்பமே கண்ணனுக்காக துடிக்கிறது. நான் வளர்த்த பையன் கண்ணன், இந்த மாதிரி தவறுகள் எதுவும் செய்து இருக்க மாட்டான் என்று தனம் சொல்லி சொல்லி அழுகிறாள். வீட்டில் மூன்று மருமகள்களும் சாப்பிடாமல் கவலையில் இருக்கின்றனர்.

சில பெண்கள்
வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்கள், என்ன உங்க கண்ணன் பொம்பளை புள்ளையை போட்டோ எடுத்து நெட்டில் உட்டுட்டானாமே... அதனாலதான் போலீஸ் வந்து பிடிச்சுக்கிட்டு போயிருச்சா என்று கிண்டல் செய்ய, மூன்று மருமகள்களும் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். எங்க கண்ணன் தப்பே செய்யலேன்னு அண்ணன்கள் கூட்டிகிட்டு வந்துருவாங்க பாருன்னு திட்டி அனுப்பறாங்க.

இல்லை தப்பு
அதற்குள் கண்ணன் மேல தப்பே இல்லைன்னு, ரெண்டாவது அண்ணனும், மூணாவது அண்ணனும் சினிமா பணியில் குற்றவாளியை பிடித்து கொண்டு வந்துட, கண்ணனை போலீஸ் விட்டுட்டறாங்க. அடுத்து பார்த்தால் மூணு மருமகள்களும் கண்ணனை பேசின பெண்களிடம் கண்ணனையும் அழைச்சுக்கிட்டு போயி, எங்க கண்ணனைப் பார்த்தா இப்படி பேசினீங்க. இனிமே யாராவது இப்படி பேசுனீங்க நடக்கறதே வேறன்னு வாங்குன்னு வாங்குன்னு வாங்கி அனுப்பறாங்க.
இதெல்லாம் பார்க்க நன்றாகத்தானே இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications