மீனா எப்ப வருவாரோ.. ஆனா முல்லையை ஒரு மணி நேரம் பார்க்கலாம்.. ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் மாற்றத்தை பண்ணியிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் ரசிகர்களுக்கு குஷியைக் கொடுத்து கொண்டாட வைத்துள்ளதுதான் மேட்டரே. டிஆர்பி ரேட்டிங்கில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பது போல இந்த சீரியலின் நேரத்தையும் அதிகரித்து இருக்கிறார்கள்.

இதுவரை அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பான இந்த சீரியலை தற்போது ஒரு மணிநேரமாக நீட்டி இழுத்து விட்டுள்ளனர். பிறகென்ன தனத்தையும், சித்துவையும் நீண்ட நேரம் தரிசிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

 ஹாட்டான சீரியல்

ஹாட்டான சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதன்மையானதாக தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலுக்கு கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . இது ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு உள்ளதால் அனைத்து ரசிகர்களுக்கும் இது பிடித்ததாக இருக்கிறது. பல படங்களிலும் சீரியல்களிலும் இதே கதையை எடுத்திருந்தாலும் இந்த சீரியலின் கதை வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.

 முல்லைக்கு ரசிகர்கள்

முல்லைக்கு ரசிகர்கள்

அதுமட்டுமல்லாமல் சீரியலின் நடிகர்களும் ரசிகர்களுக்கு பிடித்தவர்கள் ஆகவே இருக்கிறார்கள் இதுவும் இந்த சீரியலில் வளர்ச்சிக்கு ஒரு காரணம். இந்த வீட்டின் மூத்த மருமகளாக தனம் கேரக்டரில் சுஜிதா நடிக்கிறார் .இரண்டாவது மருமகள் முல்லை கேரக்டரில் விஜே சித்து நடிக்கிறார் . மூன்றாவது மருமகள் மீனா கேரக்டரில் ஹேமா நடிக்கிறார். இவர்கள் மூன்று பேருக்குமே பல சீரியல்களில் அறிமுகமாகி இருந்தாலும் இந்த சீரியலின் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்திருக்கிறது.

 மருமகள் முல்லை

மருமகள் முல்லை

அதேபோல இந்த சீரியலின் ஹீரோக்களுக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதிலும் முல்லை - கதிர் கேரக்டர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இந்த சீரியலில் மூன்றாவது மருமகளுக்கு வளைகாப்பு நடத்தி மூன்று மணிநேரம் என்ற சீரியலை ஓட்டிவிட்டார்கள் . அதுவும் அனைத்து சீரியல் நடிகர்களும் இதில் கலந்து கொண்டதால் பெரும் வரவேற்பும் இருந்தது. இதனாலோ என்னவோ தற்போது இந்த சீரியலின் டைமிங்கில் கூட்டினால் இன்னும் ரசிகர்களை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள் போல.

 மீனா எப்ப வரும்

மீனா எப்ப வரும்

இந்த சீரியலில் இன்னும் சில புதுமுகங்களும் அறிமுகமாகவுள்ளனராம். ஆனால் அது எப்பஇருந்து என்று தெரியவில்லை. அதிலும் மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதால் தொடர்ந்து அவரால் நடிக்க இயலுமா இல்லையா என்று கூட தெரியவில்லை. மீனாவின் ரசிகர்கள் அவரை ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அவர் கேரக்டருக்கு பதிலாக வேறு யாரையாவது நடிக்க வைப்பார்களா என்று இன்னமும் விஜய் டிவியிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

 மீனாவேதான் வேண்டும்

மீனாவேதான் வேண்டும்

பல ரசிகர்களும் மீனாவே மீண்டும் வரவேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதிர் முல்லையின் வாழ்க்கையிலும் பல திருப்பங்களை இனி ஏற்படுத்தப் போகிறார்கள். அசத்தலான ஒரு காதல் காட்சியை ஒளிபரப்பி வருகிறார்கள் .ப்ரமோ நன்றாக இருக்கிறது. எப்பவும் இந்த சீரியலில் ஒரே இடத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற சீன்களை இனியாவது கொஞ்சம் குறைத்துவிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு மணிநேரம் ஒளிபரப்புகள் என்றும் பல ரசிகர்கள் இந்த சீரியலுக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

 ஓய்ந்து போன மெளன ராகம்

ஓய்ந்து போன மெளன ராகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் தற்போது முடிவடைந்து விட்டதால் அந்த சீரியலுக்கான நேரத்தையும் சேர்த்து இந்த சீரியலுக்கு கொடுத்து ரசிகர்களை குதூகலமாக்கியுள்ளனர். மெளன ராகம் சீரியல் வருட கணக்கில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தற்போதுதான் சூடுபிடித்து விருப்பமான கதையோடு ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் அதை திடீரென்று இப்படி முடித்துவிட்டார்கள். இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இனி பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்புவது ஜாலியாகத்தான் டைம் பாஸ் ஆகும் என்று கமென்ட் போட்டு வருகிறார்கள்.

எப்படியோ கடை நல்லா ஓடி கல்லா கட்டினால் சரித்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+