அதை சொல்லி கேவலப்படுத்துவாங்க.. தற்கொலை முயற்சி செய்து இருக்கிறேன்.. மனம் திறந்த நடிகை லாவண்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை லாவண்யா முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார்.

தன்னுடைய குரலை வைத்து ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே கலாய்ப்பார்கள் என்று லாவண்யா கூறியிருக்கிறார்.

வீட்டில் நடிக்க சமாதிக்காமல் பல பிரச்சனைகள் வந்த நிலையில் தான் தற்கொலை முயற்சி செய்ததாகவும் நடிகை லாவண்யா தெரிவித்திருக்கிறார்.

Pandian Store Why did Lavanya attempt suicide

பேங்க் வேலை பிடிக்கல

அனைவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கும். அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிலர் பெரிய அளவில் போராட வேண்டியதே இருக்காது. ஆனால் பலருக்கும் தாங்கள் நினைத்த ஆசை, கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரும் போராட்டத்தை தாண்டித்தான் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிக்கும் நடிகை லாவண்யாவும் இருந்து வருகிறார். இவர் காலேஜ் ஸ்கூல் படிக்கும்போது டாப்பராக படித்து முடித்து இருக்கிறார். வீட்டில் பெற்றோர் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக இருந்திருக்கின்றனர். காலேஜ் முடித்ததும் பேங்கில் வேலை கிடைத்திருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த நிலையில் இவருக்கு அந்த வேலை கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லையாம்.

வீட்டில் நடந்த ரகளை

இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்திருக்கிறது. அப்போது வீட்டை எதிர்த்து வீட்டிற்கு தெரியாமல் ஆரம்பத்தில் சில மாடலிங் போட்டோ ஷூட் எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு அந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததும், வீட்டில் அடிதடி ரகளை பெரும் பிரச்சனை நடந்து இருக்கிறது. அதற்கு பிறகு தன்னுடைய கனவு குறித்து வீட்டில் புரிய வைக்க பலமுறை முயற்சி செய்தாலும் அது எடுபடாமல் போயிருக்கிறது. பிறகு இவர் உறுதியாக அவருடைய முடிவில் இருக்க வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அனுமதி கிடைத்திருக்கிறது.

நாரதர் வேலை பார்த்த அக்கா தோழி

ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போது இவர் ஒரு ஜுவல்லரி ஓப்பனிங் சென்று இருக்கிறார். அங்கே இவருடைய அக்காவின் தோழி ஒருவர் இருந்திருக்கிறார். அந்த கூட்டத்தில் லாவண்யா அந்த அக்காவின் தோழியை பார்க்கவில்லையாம். இவர் பங்க்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் பெரும் பிரச்சனையை அந்த தோழி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இப்போதே உன் தங்கச்சி என்னை பார்த்தும் பார்க்காமல் பிகுபண்ணுறா? ரொம்ப சீன் போடுறா? இனி நல்ல வளர்ந்துட்டா யாரையும் கண்டுக்க மாட்டா? என்று நல்லாவே ஏத்திவிட்டு இருக்கிறார். இதை குறித்து வீட்டில் உள்ளவர்கள் பயந்து போய் அடுத்து இனி எதுவும் செய்ய வேண்டாம் எங்கேயும் போக வேண்டாம் என்று கூறி விட்டார்களாம்.

இரவெல்லாம் அழுகை

அடுத்த நாள் காலையில் இவருக்கு ஒரு சூட்டிங் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் இவருடைய அம்மா சரி என்று சொன்னாலும் பிறகு இவருடைய அக்காவின் தோழியால் அங்க போகவே கூடாது என்று கூறிவிட்டாராம். இரவெல்லாம் லாவண்யா அழுது முகமெல்லாம் வீங்கி பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் அடுத்த நாள் சூட்டிங் போனாராம். பெரும்பாலான சூட்டிங் நாட்களில் இவர் இப்படித்தான் அழுது முகம் வீங்கி தான் போயிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய பாட்டி யாருமே இவர் நடிக்கிறார் என்பதை நம்பவில்லையாம். பிறகு இவருடைய போட்டோஸ் டிவியில் தெரிய ஆரம்பித்த பிறகு தான் நம்பி இருக்கிறார்கள்.

தொடரும் கேள்விகள்

ஸ்கூல் படிக்கும்போது இவருடைய குரல் ஆண் குரல் போல இருக்கிறது என்று நண்பர்களும் கிளாஸ்மேட்களும் ரொம்பவே இவரை கலாய்த்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்குமாம். ஆனால் இப்போது பழகி போய்விட்டது என்று கூறி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இப்ப கூட இவர் பேட்டிகளில் அவருடைய சொந்த குரலில் பேசும் போது அதிகமான கமெண்ட்கள் இவருடைய குரலை வைத்து தான் வந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+