பராசக்தி டிரெய்லர் பார்த்து நடிகர் ரிஷப் ஷெட்டி போட்ட போஸ்ட் பாருங்க! வெளிப்படையாக சொல்லிட்டாரே!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பெரும் கவனம் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாக உருவாகியுள்ள இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தொனியில் டிரெய்லர்
நேற்று வெளியான பராசக்தி டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது."டெல்லிதான் இந்தியாவா?", "எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப் பேசும் மக்களோ கிடையாது", "என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு"
போன்ற வசனங்கள் டிரெய்லரில் இடம்பெற்று, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
யூடியூபில் 25 மில்லியன் பார்வைகள்
டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனால், படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெய்லரை பகிர்ந்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், "இது சிவகார்த்திகேயனின் career best படம் ஆகும்", "சுதா கொங்கரா தரமான கதையுடன் வலுவான அரசியல் பின்னணியை சொல்கிறார்", "பொங்கலுக்கு பராசக்திதான் பேசப்படும் படம்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரிஷப் ஷெட்டி போஸ்ட்
ரசிகர்களைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "பராசக்தி டிரெய்லர் அற்புதமாக இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, சுதா கொங்கரா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பராசக்தி vs ஜனநாயகன் போட்டி
பொங்கல் ரிலீஸை முன்னிட்டு பராசக்தி மற்றும் விஜய் நடித்த ஜனநாயகன் ஆகிய படங்களுக்கிடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. ஜனநாயகன் ஒரு ரீமேக் படம் என்பதால், கதைக்கள ரீதியாக பராசக்தி முன்னிலை வகிக்கும் என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேயன் விளக்கம்
பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தைச் சுற்றி எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். "இந்தப் படம் அரசியலுக்காக அல்ல, உணர்வுக்காக. மொழியை காக்கும் கதையை சினிமா வடிவத்தில் சொல்கிறோம். யாரையும் எதிர்க்கவில்லை"
என்று அவர் தெரிவித்தார்.
டிரெய்லர் வரவேற்பு, பிரபலங்களின் பாராட்டு, அரசியல் தொனி, பொங்கல் போட்டி என பராசக்தி திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோணங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த எதிர்பார்ப்பை படம் திரையரங்குகளில் நிறைவேற்றுமா என்பதே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விஷயமாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications