சிவகார்த்திகேயனை கடுப்பேற்றிய சுதாகர்.. ’பரிதாபங்கள்’ டீமின் புது பட ப்ரோமோ வெளியானது! கலக்குறாங்களே
சென்னை: ஒரு காலத்தில் விஜய் டிவியில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் யூடியூப் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர், தற்போது 'ஓ காட் பியூட்டிஃபுல்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளனர். இவர்களின் முதல் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு தெரிவித்துள்ள சம்பவம், ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பரிதாபங்கள் யூடியூப் சேனல்
சினிமா முயற்சி: கோபி மற்றும் சுதாகர், விஜய் டிவியில் நடந்த ஆடிஷன் ஒன்றில் கலந்துகொண்டபோது, நிராகரிக்கப்பட்டனர். ஆனால், அதுவே அவர்களுக்கு ஒரு புதிய பாதையைத் திறந்தது. கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினர். சமூக அவலங்கள், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள், சமூக வலைதளங்களில் நடக்கும் சீரழிவுகள் போன்றவற்றை, நகைச்சுவை கலந்து வீடியோக்களாக வெளியிட்டுப் பலரின் பாராட்டுகளைப் பெற்றனர்.
சர்ச்சைகள் மற்றும் பாராட்டுகள்
கோபி மற்றும் சுதாகர், சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை லட்டு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு, பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்தனர். இதனால், அந்த வீடியோவை அவர்கள் நீக்க நேர்ந்தது. இருப்பினும், சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட 'சமூக அவலங்கள்' என்ற தலைப்பிலான வீடியோ, பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இது, சமூகத்திற்கு ஜாதி பிரச்சனை பற்றி ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு செல்லும் அவர்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஓ காட் பியூட்டிஃபுல் - முதல் படம்
அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ள 'ஓ காட் பியூட்டிஃபுல்' திரைப்படத்தில், கோபி மற்றும் சுதாகர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விடிவி கணேஷ், விஜி சந்திரசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி, சுபத்ரா ராபர்ட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே சி ஜோ இசையமைத்துள்ள இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், இருவரும் சார்லி சாப்ளின் கெட்டப்பில் இடம் பெற்றிருந்தனர்.
சிவகார்த்திகேயனின் ஆதரவு
'ஓ காட் பியூட்டிஃபுல்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோவில், கோபி, சுதாகருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். புரோமோவில், சுதாகர் வைலின் வாசிக்கக் கற்றுக்கொண்டதாகச் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். சிவகார்த்திகேயன் வாசிக்கச் சொல்ல, சுதாகர் சரியாக வாசிக்காமல் போக, சிவகார்த்திகேயன் கோபித்துக்கொண்டு செல்வதுபோலவும், பின்னர் கோபி அவரைச் சமாதானம் செய்து அனுப்புவதுபோலவும் காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளன. 'வேணும் மச்சா பீஸ்' இந்தப் பாடலைச் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். 'வேணும் மச்சா பீஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
கனவு நனவான தருணம்
பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோரின் பயணம், பலருக்கும் ஒரு ஊக்கமளிக்கும் கதையாகும். யூடியூபில் இருந்து சினிமாவுக்கு வரும் அவர்களின் முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 'ஓ காட் பியூட்டிஃபுல்' திரைப்படம், அவர்களின் கனவை நனவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications