அஜித் மக்களை முட்டாளாக்க மாட்டார்! ஆனால் விஜய்.. ஒரே வார்த்தையில் பார்த்திபன் ஓபனா பேசிட்டாரே!
சென்னை: நடிகர் பார்த்திபன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பார்த்திபன், இந்த முறை நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜய் குறித்து நேரடியாக கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பார்த்திபன் பேட்டி
அந்த பேட்டியில், அஜித் குமார் குறித்து பேசும்போது பார்த்திபன் கூறியதாவது: "அஜித் எப்போதுமே கூட்டத்தை தூண்டிக் கொள்ளும் வகையில் நடக்க மாட்டார். ஒரு முறை ரசிகர்கள் அவரை சூழ்ந்து ஆரவாரம் செய்தபோது, அவர் மிகவும் அமைதியாக ஜெர்கினை கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு, என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள்... எல்லாரும் உள்ளே போங்கள்' என்று நேராகக் கூறினார். அதைக் கேட்ட ரசிகர்கள் உடனே அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார்கள். அதை பார்த்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது" செயல்பாடு
அஜித்தின் செயல்
மேலும், ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு அஜித் தனது ரசிகர்களிடம் மிகவும் திறந்த மனதுடன், கட்டுப்பாடுடன் நடந்து கொள்வதாகவும் பார்த்திபன் குறிப்பிட்டார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்வில் மக்கள் ஆரவாரம் செய்தபோது, கைகாட்டி 'அமைதியாக இருக்க வேண்டும்' என சைகை காட்டியதும், கூட்டம் உடனே அமைதியாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். "அவர் எந்த இடத்திலும் கூட்ட ஆரவாரத்தை ரசிப்பதில்லை; ரசிகர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்" எனவும் பாராட்டினார்.
மேலும், பார்த்திபன் பேசும்போது, "பொதுவாக அரசியல்வாதிகளும், சில சூப்பர் ஸ்டார்களும் மக்கள் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் மக்கள் முட்டாளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக வேறுவிதமாகவே நினைப்பார்கள்" என்று சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவு செய்தார்.
விஜய்க்கு தாக்கு
அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாண்டே, "அப்படியானால் விஜய் தனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கிறாரா?" என்று நேரடியாக கேள்வி எழுப்ப, அதற்கு பார்த்திபன் தயக்கமின்றி, "ஆமாம்... பெரும்பாலும் எல்லா சூப்பர் ஸ்டார்களும், அரசியல் தலைவர்களும் அப்படித்தான் நினைப்பார்கள்" என்று பதிலளித்தார். இந்த பதில் தான் தற்போது பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
திரிஷா பற்றிய சர்ச்சை
ஏற்கனவே நடிகை திரிஷா குறித்து பார்த்திபன் வெளிப்படையாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அஜித்தை பாராட்டியும், விஜய் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களையும், அரசியல் தலைவர்களையும் ஒரே நேரத்தில் விமர்சித்தும் அவர் பேசியிருப்பது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், "இது மீண்டும் பெரிய சர்ச்சையாக மாறுமா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பார்த்திபனின் இந்த பேச்சு, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அடுத்த கட்ட எதிர்வினைகளை ஏற்படுத்துமா என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. காரணம் இந்த வீடியோவுக்கு கீழேயே விவாதங்கள் தொடங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications