ஒரே ஒரு போஸ்டில் தனுஷ் மிருணாள் காதலை உடைத்த பார்த்திபன்! இட்லி கடை அப்டேட் உடன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவில், பிரபல இயக்குநராகவும், நடிகராகவும், திகழ்ந்து வரும் பார்த்திபன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில், பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டபோதும், சினிமாவில், தொடர்ந்து பயணித்து வருகிறார். சமீபத்தில், அவர், நடிகர் தனுஷைப் பற்றி, ஒரு கிண்டலான பதிவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ளார். அது, இணையத்தில், ஒரு பெரிய விவாதப் பொருளாக, மாறியுள்ளது.

பார்த்திபனின் சினிமா பயணம்
பார்த்திபன் உதவி இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி இயக்குனராகவும் நடிகராகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார். மனதில் பட்டதை படபடவென பேசும் பார்த்திபன் எதுகை மோனையில் பேசி எதிரில் இருப்பவர்களை குழப்ப வைத்து விடுவார். அவர் சொல்ல வந்த வார்த்தைகள் தலையை சுற்றி சொன்னாலும் அதுவும் சுவாரசியமாகவே இருக்கும் பார்த்திபன் இயக்கத்தில், இறுதியாக, 'டீன்ஸ்' படம், வெளியாகி இருந்தது. இந்த படத்தில், வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா உட்பட, பதினாறு குழந்தைகள், நடித்திருந்தனர். அமானுஷ்யம் நிறைந்த காட்சிகளுடன் இயக்கப்பட்ட 'டீன்ஸ்' படம், வெற்றியும் பெற்றது.
தனுஷின் இட்லி கடை
பார்த்திபன், தற்போது, 'இட்லி கடை' படத்தில், சிறிய 'கேரக்டரில்', நடித்து வருகிறார். இந்தப் படத்தை, தனுஷ் இயக்கி, நடிக்கிறார். இது பச்சை பார்த்திபன் என்று தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
தனுஷ் பற்றிய வதந்திகள்
சமீப காலமாகவே, தனுஷ் பற்றி, பல 'கிசு கிசு' தகவல்கள், வெளியாகி வருகின்றன. அதிலும், மிருணாள் தாகூருடன், காதல், கல்யாணம், என்று, கூறப்பட்டது. ஆனாலும், இதனை, மிருணாள், மறுத்திருந்தார். தனுஷின் சர்ச்சைகள் குறித்து, பல பிரபலங்கள், பேட்டி கொடுத்துள்ளனர்.
பார்த்திபனின் கிண்டல் பதிவு
பார்த்திபன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய, 'ஆடுகளத்தில்', நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த, 'சூதாடி', இடையில் நின்று போனதும், இவையாவும், ஈடு கட்டும் விதமாக, 'இட்லி கடை'யில், ஒரு சிறு 'மினி இட்லியாக', கௌரவ வேடத்தில், நடிக்க, அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று, 'டப்பிங்' நிறைவு பெற்றது," என்று, தெரிவித்துள்ளார்.
"இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக, தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால், அதற்கு, நான் பொறுப்பல்ல, ஏனெனில், அது தான், பிசுபிசுத்த, கிசுகிசுவாய், போய் விட்டதே), அது ஆச்சர்யமில்லை என்பதை, கண் கூடாகக் கண்டேன், இட்லி கடையில். அக்டோபரில், வெந்து விடும், 'சாரி', வந்து விடும்!!!" என்று, பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்தக் கிண்டல் பதிவுக்கு, ரசிகர்கள், "பார்த்திபனுக்கு, கிண்டல் அதிகம்," என்று, தங்களது கருத்துக்களை, தெரிவித்து வருகின்றனர்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications