4 வயது மூத்த நடிகையோடு கல்யாணம், பசங்க நடிகருக்கு குழந்தை பிறந்தது.. நெகிழ்ச்சியான பதிவு.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த "பசங்க" திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சி செய்தியை கிஷோர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கிஷோரின் மனைவியான சீரியல் நடிகை ப்ரீத்திகுமார் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய புனிதா சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பசங்க பட நடிகர்
இந்த நிலையில் கடந்த வருடத்தில் நடிகர் கிஷோரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிஷோர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
காதல் திருமணம்
பசங்க திரைப்படத்திற்கு பிறகு கிஷோர் கோலி சோடா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மார்க்கெட்டில் வேலை செய்யும் இளைஞராக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்திற்கு பிறகு நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கிஷோர் மற்றும் ப்ரீத்தி இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டில் தங்களுடைய காதலை திடீரென்று அறிவித்தனர். இது பெரிய அளவில் பேசப்பட்டது. காதலை அறிவித்த சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தங்களுடைய சினிமா வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்ப்பத்தை அறிவித்த சீரியல் நடிகை
இந்த நிலையில் பொங்கல் நாளில் ப்ரீத்தி மற்றும் கிஷோர் இருவரும் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அந்த புகைப்படத்திற்கு "ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜா பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் பிறக்கும்" என்ற பாடல் வைத்திருந்தனர். அந்த பாடலை பார்த்ததும் ப்ரீத்தி கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறிவந்தனர்.

ஆண் குழந்தை
ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது அதிகமானவர். இது குறித்து இவர்கள் திருமணம் செய்த நேரத்தில் பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் இதெல்லாம் ஒரு விஷயமா? என்று இந்த ஜோடி தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது அதனை அழகிய போட்டோ உடன் கிஷோர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் இந்த தம்பதிக்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications