ரகசியமாய் திருமணத்தை முடித்த பசங்க பட ஜீவா.. மணப்பெண் இந்த பிரபலம் தான்! குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் விமல் நடிப்பில் வெளியான "பசங்க" திரைப்படத்தில் ஜீவா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீராம்க்கு நேற்று எளிமையாக திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகி பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதோடு ஸ்ரீ தான் தன்னுடைய சுவாரஸ்யமான காதல் கதை குறித்து பதிவு ஒன்றும் வெளியிட்டு இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஒரு சிலர் சில வருடங்கள் கழித்து பார்க்கும் போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீராம். 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். அந்த திரைப்படத்தில் பெரிய அளவில் சாகச காட்சிகளும் சண்டை சச்சரவுகளும் இல்லை என்றாலும் எதார்த்தமாக ஒரு கதையை பார்த்தது போல பீல் குட் படமாக அமைந்திருந்தது.

பசங்க திரைப்படத்தில் ஜீவா கேரக்டரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து இருக்க முடியாது. இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஜீவா கேரக்டர் வில்லத்தனம் கலந்த சுட்டி குழந்தையாக இருப்பார். அதிலும் ஜீவா தன்னுடைய நண்பர்களிடம் சீன் போடுவதற்காக செய்யும் செயல்கள் எல்லாம் பலரையும் சிரிக்க வைக்கும். அந்த ஜீவாவின் பிரண்டு இரண்டு பேரும் கூடவே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஜீவா கொடுக்கும் ஐஸ் வாங்கி சாப்பிடுவதற்காக ஒரு நண்பர் ஜீவாவுக்கு இப்போ கோபம் வரும்... ஜீவாவுக்கு இப்ப கோவம் வந்தா கையை முறுக்குவான்.. இப்ப கோபம் வந்ததும் குத்த போறான்... என்று ஜீவாவை ஏத்திக் விட்டுக் கொண்டிருப்பார். இது போன்ற கேரக்டரை நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்திருப்போம் ஆரம்பத்தில் ஜீவா கேரக்டர் அந்த திரைப்படத்தில் நெகட்டிவ்வாக இருந்தாலும் பிறகு பாசிட்டிவாக மாறும்.

முதல் திரைப்படத்திலேயே ஸ்ரீராமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் திரைப்படம் போல அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ ராமுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் தன்னுடைய திருமண புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிந்திருக்கிறார். இவருடைய திருமணத்திற்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீ ராமின் மனைவி ஆரம்பத்தில் திருமணமே வேண்டாம் என்று நினைத்து சொல்லிக் கொண்டிருந்தாராம் ஆனால் ஸ்ரீராம் அவரை காதல் வயப்படுத்தி திருமணம் செய்து கொண்டேன் என்று ஸ்ரீராம் பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications