'பசங்க' பட ஜீவாவின் வளர்ச்சியை பாருங்க! 2050ல் கார்பன் இல்லாத உலகம்! AATRLA நிறுவன CEOவாக பதவி
சென்னை: 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' திரைப்படம் தமிழ் சினிமாவில் சிறார்களை மையமாகக் கொண்டு உருவான முக்கியமான படங்களில் ஒன்றாகும். அந்தப் படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரமாக மனதை கவர்ந்த நடிகர் ஸ்ரீராம் தனது உண்மையான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார். இப்போது அந்த சிறுவன் வளர்ந்து தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

ஒரு சில திரைப்படங்கள் 90ஸ் இளைஞர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் அதில் ஒரு படம்தான் பசங்க திரைப்படம். இந்த திரைப்படத்தில் இரண்டு சிறுவர்கள் இடையே ஏற்படும் சண்டை, கோபம், நட்பு போன்றவற்றை ஒரு பக்கம் காட்ட அதே போல அந்த இரண்டு சிறுவர்களின் வீட்டில் இருக்கும் இளைஞர்களின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனை போன்றவையும் என்ற திரைப்படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றானது. இந்த படங்களில் நடித்த சிறுவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் ஜீவாவாக பலருடைய மனம் கவர்ந்த ஸ்ரீராம் இப்போது அல்ட்ரா நிறுவனத்தின் உயர் பதவிக்கு சென்று இருக்கிறார்.
ஸ்ரீராமின் திருமணம்
நடிகர் ஸ்ரீராம் தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை அண்மையில் திருமணம் செய்துள்ளார். ஸ்ரீராம் ஆரம்பத்தில் 'தோழி' என கூறி நிகில் பிரியாவை தனது குடும்பத்துக்கு அறிமுகம் செய்துள்ளார். பின்னர் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
சினிமா பயணம்
'பசங்க' திரைப்படம் தேசிய விருதை வென்ற ஒரு படம். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீராம் தனது திறமையான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் வென்றார். இந்தப் படத்திற்கு பிறகு ஸ்ரீராம் 'மெரினா', 'சகாப்தம்' போன்ற படங்களில் நடித்தார். 'சகாப்தம்' படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை.
புதிய முயற்சி
AATRLA: திருமணத்தை அடுத்து தொழில்நுட்பத் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ள ஸ்ரீராம் தற்போது 'AATRLA' என்ற புதிய தலைமுறை எரிசக்தி நிறுவனத்தின் 'CEO' ஆக பதவி ஏற்றுள்ளார். "2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத ஒரு நாடாக மாறவேண்டும் என்பதே எமது நிறுவனத்தின் இலக்கு" என அவர் கூறுகிறார். பசுமை எதிர்காலத்திற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ள இந்த புதிய முயற்சி சமூக நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்துவதாகும் என்று கூறியிருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications