அத்துமீறிய ரசிகர்கள்.. செம சம்பவம் செய்த பவித்ரா.. இப்படியொரு பதிலடியா? குவியும் பாராட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா நெட்டிசன்கள் செய்த செயலை பார்த்து கடுப்பாகி திடீர் பதிவு போட்டு இருக்கிறார். அதே நேரத்தில் அவர் செய்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் விஜய் டிவியில் முடிவுக்கு வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் கலந்து கொண்டனர். அதில் பவித்ரா ஜனனியும் ஒருவர். இவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் தான். தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு பிறகு சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்.

அதுபோல விஜய் டிவியில் ஆரம்பத்தில் பல சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர்களிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து வந்த பவித்ராவிற்கு ஈரமான ரோஜாவே சீரியல் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த சீரியலுக்கு பிறகு தான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியல் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது.
ஆனாலும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தொடங்கிய பிறகு அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அதுபோல பிக் பாஸ் வீட்டில் அமைதியானவர் மற்றும் அன்பானவர் என்ற டேகை பவித்ரா ஜனனிக்கு ரசிகர்கள் கொடுத்திருந்தனர்.

சில இடங்களில் செல்லமாக கோபப்படுவது, சில இடங்களில் தன் மீது தவறு இல்லை என்றாலும் அடுத்தவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் பிரச்சனை ஏற்படுத்தாமல் சென்று விடுவது, அதுபோல அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு உதவி செய்வது போன்ற பவித்ராவின் கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டது.
அதனாலேயே பிக் பாஸ் வீட்டில் கடைசி நாள் வரைக்கும் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தன்னுடைய நண்பர்கள் எல்லோருடனும் சேர்ந்து அடிக்கடி போட்டோக்கள் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய பிறந்த நாளை பிக் பாஸ் நண்பர்கள் குழுவோடு சேர்ந்து கொண்டாடியிருந்தார்.

அதுபோல பிக் பாஸ் நண்பரும் போட்டியாளருமான ரயானுடன் பர்வத மலைக்கு சென்று இருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஏற்கனவே பவித்ரா பல கோவில்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

டிராவலில் அதிக ஆர்வம் உள்ள பவித்ரா அடிக்கடி சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். ஆனால் இப்போது ரயானோடு அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தது. அது குறித்து கோபத்தில் ஒரு பதிவை பவித்ரா போட்டு இருக்கிறார்.

அதில், அனைவரும் நலம் என நம்புகிறேன். சில விஷயங்களை விரைவாக தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அதனை புரிந்து கொண்டு நடப்பீர்கள் என நம்புகிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்வது எண் தனிப்பட்ட விருப்பம். சூழலை புரிந்துக்கொள்ளாமல் ஒரு சிலர் என்னைப் பற்றிய கருத்துக்களை பதிவிடுவது மிகவும் வேதனை அளிக்கிறது.
விரும்பத்தகாத வகையில் வேறொருவரையோ அல்லது வேறொரு பேன்ஸ் பேஜையோ குறிப்பிட்டு பதிவிடும் கமெண்ட்டுகளை என் பக்கத்தில் நீக்கிவிட்டேன். நீங்கள் சில ஜோடிகளை பிக் பாஸ் வீட்டில் ரசித்திருக்கலாம் ஆனால் அதையும் தாண்டி அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று இருக்கிறது.

அது எதார்த்தத்தில் இருந்து பயங்கர வித்தியாசமானவை. எங்கள் பரஸ்பர ரசிகர் பக்கங்கள் இதையே மதிக்கின்றன என நாங்கள் உண்மையாக நம்புகிறோம். எனக்கான இடத்தை எனக்கு கொடுங்கள் என்று அந்த பதிவில் பவித்ரா குறிப்பிட்டு இருக்கிறார். பவித்ரா செய்த இந்த செயலை அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications