குணிந்து உட்கார்ந்து.. வெட்கத்தை சிந்திய பவித்ரா.. சான்ஸே இல்லை.. ஏங்கிய ரசிகர்கள்
சென்னை: பாவாடை தாவணியில் பவ்வியமாக அமர்ந்து கை நிறைய வளையல்களை கலகலவென போட்டபடி ஒற்றை முடி முகத்தில் ஆட தலைகுனிந்து நிலத்தை பார்த்து, நாணத்தால் முகம் சிவந்து ஒரு சூப்பர் போட்டோ போட்டுள்ளார் பவித்ராலட்சுமி.
படத்தைப் ரசிக்கும் ரசிகர்களை ஏங்க வைத்த பவித்ராவின் அந்த போட்டோ தான் தற்போது இன்ஸ்டாகிராமை திறந்ததும் அதிகமாக வலம் வருகிறது.
தமிழ் திரை உலகிற்கு ஹீரோக்களையும்,காமெடி நடிகர்களையும் அடையாளம் காட்டி வரும் விஜய் டிவி நிகழ்ச்சிகளால் தற்போது லேட்டஸ்ட் டாக ஹீரோயின் மெட்டிரியலாக அடையாளம் காட்டபட்டுள்ளவர் பவித்ரா லெட்சுமி ஆவார்.

கொங்கு தமிழ் பேசும் அழகி
தமிழ் பேசும் பெண்கள் கதாநாயகியாக பஞ்சம் உள்ள தமிழ் திரை உலகில் அழகான கொங்கு தமிழ் பேசும் கோயம்புத்தூர் பெண்ணான பவித்ரா விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் புகழையும் பெறச் செய்தது என்னவோ விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய குக் வித் கோமாளி தான்.

செம பெர்பார்மன்ஸ்
இந்த நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து இவர் காட்டிய பெர்பார்மன்ஸே அதற்க்கு காரணம் என்று இவரே பல பேட்டிகளில் சிலாகித்து கூறியுள்ளார். அடுத்து சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் நுழைய போகும் பவித்ரா சேலை மற்றும் பாவாடை தாவணியில் பார்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போலவே இருப்பதால் பெரும்பாலான விளம்பர மாடல் மற்றும் போட்டோஷூட்டுகளில் சேலை,பாவடை தாவணி கட்டி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

போட்டோஸ் வைரல்
பவித்ரா லட்சுமி அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் ஒரு ஐடி வைத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் படை அவரது பெயரில் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் சில ஐடி களை வைத்து இவர் எடுக்கும் போட்டோஷூட் மட்டுமின்றி இவர் இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்ட்டுகளை வைரலாக்குவதையே தொழிலாக செய்து வருகின்றனர்.

மனசு ஏங்குதாம்
அதே போன்றே தற்பொழுதும் வெட்கம் தெறிக்க தலை குனிந்து காதல் பார்வை வீசி தாவணியில் இவர் போட்ட போடடோவும் வைரலாகியுள்ளது. யாரையும் இவ்வளவு அழகா பாக்கல பார்த்ததும் மனசு ஏங்குது என பலர் இவரை நினைத்து கவிதைகளை வடித்து வருகின்றனர் நாளுக்கு நாள் கியூட்னெஸ் அதிகமாகிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர்.

டிபியில் லட்சுமி
தற்போது இளைஞர்களின் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் டீபிகளிலும் இவருடைய போட்டோஸ்கள் தான் அதிகமாக இருந்து வருகிறது . போகிற போக்கைப் பார்த்தால் ரசிகர்கள் இவருக்காக சங்கம் அமைத்து கோயில் கட்டி விடுவார்கள் போல .அந்த அளவிற்கு இவருடைய ஒரு போஸ்ட் பார்த்ததும் கமெண்ட்களால் சமூக வலைத்தளத்தையே கதிகலங்க விட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications