பெப்சி உமா இப்ப என்ன பண்ணிட்டிருக்கார் தெரியுமா?
சென்னை: பெப்சி உமாவை ஞாபகம் இருக்காங்க.. அதெப்படிங்க மறக்க முடியும்.. ஒவ்வொருவரையும் மரியாதையாக, அன்பாக அவர் அழைத்துப் பேசிய காலத்தை மறக்க முடியுமாங்க.
பெப்சி உமாவை யாராலும் மறந்து விட முடியாது. தமிழ்த் தொலைக்காட்சிகளின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அவர் நடத்தியது ஒரு டெலிபோன் நிகழ்ச்சிதான்.
ஆனால் அந்த நிகழ்ச்சியின்போது அதில் அவர் உடுத்தி வரும் புடவைகளை பார்ப்பதற்கு பெண்களும், அவரது சிரிப்புக்கு ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். அப்படி ஒரு கிரேஸ் அந்தக் காலத்தில் உமா மீது இருந்தது.

வாருங்கள் வாழ்த்துவோம்
சென்னையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி 1974 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் அப்பா ஒரு வக்கீல். அம்மா நடன கலைஞர் மற்றும் ஓவியர். இவர் எம்பிஏ முடித்தவர். இவரின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "வாருங்கள் வாழ்த்துவோம் "என்ற நிகழ்ச்சிதான். இதில் 104 ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

உங்கள் சாய்ஸ்
தூர்தர்ஷனைத் தொடர்ந்து சன் டிவியில் பணியாற்ற தொடங்கினார். அங்கு பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார். சன் டிவியில் ஸ்டார் ஷோ என்ற நிகழ்ச்சியை தயாரித்து கங்கை அமரன் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கியும் உள்ளார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய போது இவருக்காக தமிழகத்திலேயே முதல் முதலாக கட்டவுட் வைக்கப்பட்டது. உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தது.

கட் அவுட் நாயகி
தொகுப்பாளி க்கு முதன்முதலாக கட்-அவுட் வைக்கப்பட்டது இவருக்கு தான் .அந்தக் காலக்கட்டங்களில் குஷ்புக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். அவர் ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அதில் திரைப்பட நடிகர் நடிகைகளையும் முன்னணி பிரமுகர்களையும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்களின் நேர்காணல் மூலம் மக்களுக்கு நிறைய சுவாரசியமான கதைகளை தெரியப்படுத்தினார் .

சின்னத்திரை மறு பிரவேசம்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஆல்பம் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். தற்போது பெப்சி உமா ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் கட்டிடத் துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவிற்கு அதிகாரியாக இருக்கிறார். பல்வேறு சேனல்களில் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்து விட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
Recommended Video

மீண்டும் வர தயார்தான்
ஆனாலும் தனக்கு புகழ் தேடிக் கொடுத்த சின்னத்திரையை மறந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். புதிய கான்செப்ட்டுடன் ஒரு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியா இருக்கிறதாம். உமாவிற்கு தற்போது தனது குடும்பம் தனது வேலை என்று ஒரு நல்ல குடும்பத் தலைவியாக தனது கடமைகளை செய்துவருகிறார் நம்ம பெப்சி உமா.
சீக்கிரம் ஏதாவது சூப்பர் நிகழ்ச்சி மூலம் வாங்க உமா மேடம்.. காத்திருக்கிறோம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications