தலைசாய்த்து பார்த்த தர்ஷா...கவிதைகளை கொட்டும் ரசிகர்கள்
சென்னை: சிலிர்க்கும் அழகை சிம்பிளாக காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தர்ஷா குப்தா.
அதிக ஒப்பனைகள் இல்லாமல் எளிமையான இவருடைய போட்டோவைப் பார்த்ததும் கவிதைகள் ஆறாக ஓடுகிறது.
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று வழக்கம்போல நெட்டிசன்கள் வரிசை கட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

தெறிக்கும் லைக் பட்டன்
எளிமையின் உருவமாக தலை சாய்த்தபடி ரசிகர்களை கவர்ந்திழுத்த தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் மெய்மறந்து போய் கமெண்ட்கள் அனுப்புவதற்கு கூட கை வராமல் லைக் பட்டனை தெறிக்க வைத்துவிடுகிறார்கள். ஒரு சில ரசிகர்களுக்கு எந்த மாதிரி கமெண்ட் போடலாம் என்று யோசிப்பதற்கு கூட மனம் வரவில்லையாம். அதனாலேயே பலர் தங்களுடைய ஹார்டின்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் காலூன்றி தனக்கான அங்கீகாரத்தை பெற்று விட்டாலும் இவருக்கு நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அதனாலேயே நாட்கள் தவறாமல் இவர் போடும் போஸ்ட்டை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் இவர் பின்னாடியே சுற்றி கொண்டிருக்கிறது. இவர் எப்போது போஸ்ட் போடுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

முதல் திரைப்படத்தில் வெற்றி
சின்னத்திரையில் முதல் முறையாக முள்ளும் மலரும் சீரியலில் காலடி எடுத்து வைத்து அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர். என்னதான் சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் இவர் டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். எப்போதும் பிஸியாக இருந்தாலும் சைடு கேப்பில் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. முதல் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிகரிக்கும் கவிதைகள்
சீரியல்களில் படு பவ்வியமாக நடித்த இவர் சமூக வலைத்தளத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அழகை காட்டி இருக்கிறார். இவருடைய பாவாடை தாவணி போட்டோக்கள் முதல் மாடர்ன் உடை போட்டோக்கள் வரை அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறது. தற்போது கூட எளிமையின் உருவமாக இவர் சிம்பிளாக உடை அணிந்தபடி தலை சாய்த்து பார்க்கும் பார்வையை பார்த்ததும் ரசிகர்கள் வழக்கம் போல தங்களுடைய கவிதைகளை பொழியத் தொடங்கி விட்டார்கள். இவரால் பல ரசிகர்கள் கவிஞர்களாக மாறிவிடுவார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications