பூங்குயில் பாட்டு பிடிச்சு இருக்கா..பூங்காற்றே பிடிச்சிருக்கா..?
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞர் விவேகா தமது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
நீ வருவாய் என படத்தில் தாம் எழுதிய முதல் பாடலான பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா பூங்காற்றே பிடிச்சுருக்கா பாடல், வானத்தை போல படத்துக்கு பாடல் வாய்ப்பு வாங்கி கொடுத்த அனுபவத்தையும் கூறினார்.
ராஜகுமாரன் சார், தனது குருநாதர் விக்கிரமன் சாருக்கு இந்த பாடலை போட்டு காண்பிக்க, விக்கிரமன் தான் இயக்கும் வானத்தை போல் படத்துக்கு எஸ் ஏ ராஜ்குமாரிடம் சொல்லி விவேகாவுக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தாராம்.

ராஜா சார் இசையில்
ராஜா சார் இசையில் நான் ஒரு 1500 பாடல்கள் எழுதினதுக்குப் பிறகுதான் எழுத போனேன். அப்பவே பயமாத்தான் இருந்தது. ஆனா, எழுத ஆரம்பிச்ச உடனே பயம் எல்லாம் போயிருச்சு. ரொம்ப ஆசையா கேட்பார்.. இப்படி இருக்கு..அப்படி இருக்குன்னு சொல்லி ஊக்குவிப்பார்... பாராட்டுவார்.

சிங்கம் சீரிஸ்
அனிருத் இசை வரைக்கும் எழுதிட்டேன்.. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கடந்த பத்து வருஷமா பாட்டு எழுதிக்கிட்டு இருக்கேன். அவர் இல்லாம இந்த இருபது வருஷத்துல நான் வேற இசை அமைப்பாளர் கூட வேலை செய்து இருக்கேன். நான் இல்லாம அவர் எந்த படத்துக்கும் பணி செய்தது இல்லை. சிங்கம் சீரிஸ் பாடல்கள் அப்படித்தான் அமைஞ்சது.

காஞ்சனா சீரிஸ்
காஞ்சனா சீரிஸ் பாடல்களும் அப்படித்தான். லாரன்ஸ் மாஸ்டர் என் பாடல்கள் படத்துக்கு உயிர் கொடுத்து இருக்கும் என்று சொல்லி இருப்பார். வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா போன்ற பாடல்கள் குழந்தைகள் விரும்பி ரசிக்கும் பாடல்கள்.

சர்ச்சை வேண்டாம்
சிறுத்தை சிவா சார் சர்ச்சை வேண்டாம்.. யாரையும் புண்படுத்த கூடாதுன்னு நினைக்கும் மனிதர். நல்ல தரமான தமிழ் சொற்களை பயன்படுத்துங்கன்னு கேட்பார்.சுதந்திரமா பாடல் எழுதுங்கன்னு சொல்லுவார். அதனால்தான் வீரம் படத்துல ரத கஜ பாடல் எல்லாம் என்னால எழுத முடிஞ்சுது என்றார். அஜீத் சார் பாட்டெல்லாம் கேட்டுட்டு என்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டார், என்றும் சொன்னார் கவிஞர் விவேகா.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications