போகுமிடம் வெகு தூரமில்லை படம் எப்படி இருக்கு? சம்பவம் செய்த நடிகர் கருணாஸ்! அப்லாஸ் வாங்கிய விமல்!
சென்னை: வாழை, கொட்டுக்காளி படங்கள் வந்த நிலையில் போகுமிடம் வெகு தூரமில்லை என்ற பெயரில் வெளியான படம் குறித்து யாருக்கும் தெரியவில்லை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
குறைந்த பட்ஜெட்டில் நிறைய நிறைய நல்ல படங்கள் வருகின்றன. அவை பெரிய படங்களின் ஆதிக்கத்தால் தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் தேதி தள்ளிச் செல்லும் நிலை உள்ளது. இன்னும் சில படங்கள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் உள்ளன.

அப்படி நிறைய படங்களை நாம் மிஸ் செய்துள்ளோம். அதில் முக்கியமானது போகுமிடம் வெகுதூரமில்லை என்ற படம் என்கிறார்கள். இந்த படத்தில் பவன், ஆடுகளம் நரேன், கருணாஸ், விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் திருநெல்வேலியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இதில் விமல் அமரர் ஊர்தி ஓட்டுநராக நடித்துள்ளார். இந்த படத்தில் தனது மனைவியை பிரசவத்திற்கு சேர்த்துவிட்டு பணமில்லாமல் தவிக்கிறார் விமல், இதனால் இறந்த முதியவரின் உடலை அமரர் ஊர்தியில் வைத்து திருநெல்வேலிக்கு எடுத்துச் சென்றால் பணம் கிடைக்கும் என்பதற்காக அந்த பொறுப்பை ஏற்கிறார் விமல்.

அப்போது கூத்து கலைஞரான கருணாஸ் அந்த வண்டியில் ஏறுகிறார். இதில் நடுவழியில் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினையை அழகாக சொல்கிறது இந்த திரைப்படம். இந்த படத்தின் இறுதி காட்சியில் விமல் கண்களை குளமாக்கியுள்ளார். அப்பாவித்தனமாக நடித்திருக்கிறார் கருணாஸ். இரவு நேரத்தில் நெடுஞ்சாலை காட்சிகள் பெரிய ப்ளஸ்ஸாக இந்த படத்தில் அமைந்துள்ளது.
இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன. வாழை, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வந்ததால் இந்த போகுமிடம் வெகு தூரமில்லை என்ற படம் பல பேருக்கு தெரியாமல் போனது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். அது போல் தேவையே இல்லாமல் வாழை, கொட்டுக்காளி ஆகிய படங்களுக்கு ஓவர் ஹைப் கொடுத்துவிட்டார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த படத்தில் கருணாஸ் நன்றாக நடித்திருக்கிறார் என்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸானது. கடந்த 8ஆம் தேதி இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் வெளியானது. இது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications