பண்ணை வீட்டில் அலறிய குரல்.. 275 பெண்கள், 1100 வீடியோ! பொள்ளாச்சி கேஸில் நிஜ குற்றவாளி யார்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.. குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பானது, அரசியல் கட்சியினர், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.. இந்த குற்றவாளிகள் 9 பேர் என்றாலும், இவர்களுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார்? அரசு வழக்கறிஞர்கள் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோதே, பின்னாலிருந்து ஒரு குரல் கேட்கிறது.. "நிறைய குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள்" என்று குரல் ஒலித்தது.

Television Pollachi Case Resorts

திருப்பூர் ஹைவேஸ் கொடுமை

பார் நாகராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டவர்.. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அவரது பெயர் எப்படி விடுபட்டது. அவரது திருமணத்துக்கு 5 அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.. அவ்ளோ பெரிய நபரா அவர்? அதிமுகவின் ஸ்தாபகரா? நிறுவனரா? 5 முறை எம்எல்ஏவாக இருந்தவரா? கட்சிக்காக தீக்குளித்தாரா? ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அறிமுகமானவரா? பார் நாகராஜ் குற்றவாளி இல்லை என்றால், அன்று சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?

இதுபோலவே, 6 மாதத்துக்கு முன்பு, கோவை திருப்பூர் ஹைவேஸில், காரிலிருந்து எகிறி குதித்து பெண் ஒருவர் இறந்துவிட்டார்.. காருக்குள்ளேயே வன்புணர்வு நடந்துள்ளது.. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, ஓடும் காரில் இருந்து குதிக்கும்போது அந்த பெண் இறந்துவிட்டார்.. இந்த விசாரணையை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்..

ஓடும் காரில் பலாத்காரம்

காரில் கல்லூரி மாணவிகளை ஏற்றி, காருக்குள்ளேயே பலாத்காரம் செய்யும் தைரியம் யாருக்கு வரும்? சாதாரண குடிமகனுக்கு இப்படி துணிச்சல் வராது.. தொழிலதிபர் மகனுக்கோ, அதிகாரி மகனுக்கோ, சாதாரண நபருக்கோ, சொகுசு காரில் பெண்களை பலாத்காரம் செய்யும் அளவுக்கு செல்ல மாட்டார்கள்.. நிச்சயம் அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த தைரியம் வரும்.

பண்ணை வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, பெல்ட்டால் அடித்தே துன்புறுத்தி பொள்ளாச்சியில் பலாத்காரம் செய்துள்ளனர்.. அண்ணா அடிக்காதீங்க என்று கதறினார்கள் பெண்கள்.. சூடு சொரணை கெட்ட தமிழகம் இது. யார் அந்த உண்மை குற்றவாளி?

நீதிபதியின் சரியான தீர்ப்பு

அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு மிரட்டி பயன்படுத்திய நபர்களில் 9 பேர்தான் இருக்கிறார்கள். பெண்கள் அன்று புகார் தர வந்தால், அவர்களது புகார்கள் அழிக்கப்பட்டன.. ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.. லேப்டாப், செல்போன், மெமரி கார்டு அழிக்கப்பட்டுவிட்டன.. குற்றவாளிகளை கொண்டு வருபவர்களை விசாரித்து நீதிபதிகள் தண்டனை தருவார்களே தவிர, குற்றங்களுக்கு பின்னாடியுள்ள குற்றவாளிகளை தேடிப்பிடித்து கைது செய்வது காவல்துறையின் பணியாகும்.

இந்த பொள்ளாச்சி வழக்கில் சரியான தண்டனையை நீதிபதி தந்துள்ளார்.. ஆனால், இந்த தீர்ப்பு வந்ததை வெற்றி வெற்றி என்கிறது திமுக.. 100 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதில் என்ன வெற்றி இருக்கிறது?" என்று காட்டமாக கேட்டுள்ளார்.

முன்னதாக, மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அரசியல்வாதிகள் செய்த ஒரு குற்றம்.. இதில் சிறு அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களே, இந்த குற்றத்துக்கு பின்னணியில் உள்ளது மிகப்பெரிய ஆட்கள்.

275 பெண்கள், 1100 வீடியோக்கள்

மொத்தம் 275 பெண்கள், 1100 வீடியோக்கள் 11 டெரா பைட் அளவுக்கு இருந்தன.. அவையெல்லாம் அழிக்கப்பட்டன.. பிறகு சிபிஐ அழிக்கப்பட்ட வீடியோக்களை மீட்டெடுத்தனர்.. இந்த வீடியோக்கள் இப்போது இருக்கிறதா? எங்கிருக்கிறது தெரியவில்லை..

இப்போதைக்கு 8 பெண்கள் மட்டுமே வெளிவந்துள்ளார்கள்.. ஆனால், 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 9 குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.. ஆனால், குற்றம் செய்தவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள். இதுக்கு தலைமை தாங்கியவர் ஒரு பொலிடிக்கல் பாஸ்.. அவரது மகன் ஆடிய பல்லாங்குழிதான் இது" என்றெல்லாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+