pommukutty ammavukku serial: திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையோட கதை!
விஜய் டிவியில் இன்று முதல் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கியுள்ள சீரியல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இது திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன இரண்டரை வயது பெண் குழந்தை, அதைத் தேடி வாடும் அம்மா பற்றிய கதை. தாய் வேறு இடத்தில்...குழந்தை தனியாக வளர்கிறது.
குழந்தையை தொலைக்கும்போது கைக்குழந்தை. இப்போது குழந்தை தொலைந்து நாலு வருஷம் ஆச்சுன்னு சொல்றார் குழந்தையின் அப்பா. குழந்தையும், அம்மாவும் ஒன்று சேர்வார்களா என்று தினமும் எதிர்பாப்போடு சீரியலை கொண்டு செல்ல இருக்கிறார்கள், போலும்.
இந்த சீரியலில் எல்லாரும் பார்த்த முகமாகவே இருக்கிறார்கள். குழந்தையின் அம்மா தவிர. விஜய் டிவிக்கு என்று நடிக்க ஒரு தனி நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த சீரியலிலும் நடித்து வருகிறார்கள்.

விஜய் டிவி மதிய சீரியல்
விஜய் டிவியில் மத்தியான நேரத்தையும் சீரியல்களை ஒளிபரப்பி சன்,ராஜ், பாலிமர் தொலைக்காட்சிகளோடு போட்டிக்கு வந்து இருக்கிறார்கள். எப்போதும் விஜய் டிவியில் மறு ஒளிபரப்பு சீரியல்களையே பார்க்க முடியும். ஆனால், இப்போது மதியம் 2 மணிக்கே சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளன. இதில் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், தேன்மொழி பிஏ போன்ற சீரியல்கள் புதிதாக பகல் நேரத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்து இருக்கிறது.

சன் டிவியில் சீரியல்கள்
சன் டிவியில் சீரியல்கள் ஆக்கிரமிப்பு என்பது காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3:00 மணிவரை இருக்கிறது. இதற்கு பின் சன் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். அந்த நேரத்தில்தான் விஜய் டிவி மறுமுறை ஒளிபரப்பு என்று சில சீரியல்களை மாலை 5:30 மணி வரை ஒளிபரப்பி வந்தது.இப்போது இதில் புதிதாகவும் சீரியல்கள் மதிய நேரத்துக்கு என்று ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளன.

போட்டி வேண்டும்
போட்டி வேண்டும்தான் என்றாலும், சீரியல்கள் ஒளிபரப்புவதிலா அந்த போட்டி இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்றாலும் மக்களுக்கு பிடித்த இடத்தில் அதுவும் முதலிடத்தில் தொலைக்கட்சி சீரியல்கள்தான் உள்ளன. இதில் போட்டி இருப்பதும் நல்லதுக்குத்தான் போல. பாலிமர், ராஜ் தொலைக்காட்சிகள் கூட மத்தியான நேரத்தில் டப்பிங், மற்றும் சொந்த தயாரிப்பு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இன்று முதல் ஒளிபரப்பாகத் துவங்கி இருக்கும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலும் சத்யராஜ், சுஹாசினி நடித்த திரைப்படத்தின் பெயரைக் கொண்டு அமைந்துள்ளது. விஜய் டிவியின் பல சீரியல்கள், சினிமாவின் பெயரைக் கொண்ட சீரியல்களாகவே அமைத்து இருப்பதையும் பார்க்கலாம். இந்த டிரெண்டை விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலம் ஆரம்பித்து வைக்க கப்பென்று பிடித்துக்கொண்டு மற்ற சேனல்களும் சினிமா பெயரை சீரியல்களுக்கு சூட்டி, மக்களிடம் சுலபத்தில் ரீச்சாகி வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications