Pongal OTT: ஜனநாயகன் இல்லை.. ஓடிடியில் பொங்கல் கொண்டாட்டம் முழு ஸ்விங்! லிஸ்டில் இந்த படமும் இருக்கு
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாததால் இந்தாண்டு பொங்கல் தியேட்டர் ரேஸ் சற்று அமைதியாக இருந்தாலும், அந்த இடத்தை ஓடிடி தளங்கள் சும்மா விடவில்லை. "வீட்டிலேயே திருவிழா" என்ற ஸ்டைலில், ஒவ்வொரு ஜானரையும் குறிவைத்து படங்களையும் வெப் தொடர்களையும் இறக்கி ரசிகர்களை ஸ்க்ரீனுக்கு கட்டிப் போட்டிருக்கின்றன.

ஷெல் (Shell)
வயதை குறைக்கும் மருத்துவ சிகிச்சை... அதற்கு பின்னால் மறைந்திருக்கும் பயங்கர உண்மை! ஷெல் ஒரு சயின்ஸ்-த்ரில்லர். இளமை வேண்டும் என்ற ஆசையை வைத்து, மரபணு சோதனைகள், காணாமல் போகும் நோயாளிகள் என படம் மெதுவாக திகிலை உருவாக்குகிறது. ஹாலிவுட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.
தி ரிப் (The Rip)
பெரும் தொகை கைப்பற்றப்பட்டதும், போலீஸ் குழுவுக்குள் உருவாகும் துரோகம் தான் தி ரிப். நம்பிக்கை, பேராசை, உயிர் போராட்டம் - மூன்றையும் கலந்த க்ரைம் த்ரில்லர். வேகமான ஸ்கிரீன்ப்ளே காரணமாக படம் ஒரு நிமிடமும் போர் அடிக்க விடுவதில்லை.
தஸ்கரி
தங்கம், போதைப்பொருள், சர்வதேச கடத்தல்... விமான நிலையத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த வெப் தொடர், சுங்கத்துறை அதிகாரிகளின் ஆபத்தான பணியை நிஜத்திற்கு நெருக்கமாக காட்டுகிறது. ஒவ்வொரு எபிசோடும் கிளிஃப்ஹேங்கர் ஸ்டைலில் முடிவதால் பிஞ்சு நேரத்தில் பிஞ்சு எபிசோடு பார்க்க வைக்கும் வகை.
மகாசேனா
தேனி குரங்கணி மலைப்பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவான மகாசேனா, புராணக் கதை கலந்த ஆக்ஷன் திரில்லர்.
ஒரு புனித 'யாளி' சிலையை காப்பாற்ற பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டம், அதற்குள் ஒரு தந்தை-மகள் பாசம், காடுகளில் ஓடும் யானை என காட்சிகள் அனைத்தும் படத்தை வித்தியாசமாக மாற்றுகின்றன. மெதுவாக தொடங்கினாலும், கிளைமாக்ஸ் நோக்கி படம் பிடிவாதமாக இழுத்துச் செல்கிறது.
பா. பா. பா.
ஒரு கடத்தல் சம்பவம்... ஆனால் பணம் கேட்காமல் நீதியை கேட்கும் வில்லன்! பா. பா. பா. படம் அரசியல் சாடலோடு கூடிய ஆக்ஷன்-காமெடி. சீரியஸாக ஆரம்பித்து, இடையிடையே காமெடி டோஸ் கொடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்யும் வகையில் அமைந்துள்ளது. லைட் என்டர்டெயின்மெண்ட் விரும்புவோருக்கு சரியான தேர்வு.
Can This Love Be Translated
மொழியை தாண்டிய காதல் ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு உலகப் புகழ் ஸ்டார்... இருவருக்குள்ளும் உருவாகும் வித்தியாசமான காதலை சொல்லும் இந்த கொரியன் தொடர், ரொமாண்டிக் காமெடி ரசிகர்களின் பேவரிட். லைட், க்யூட், ஃபீல் குட் வகை.
அனந்தா
ஆன்மீகம், மனித வாழ்க்கை, நம்பிக்கை - இந்த மூன்றையும் சேர்த்து சொல்வதே அனந்தா. பல நகரங்களில் வாழும் ஐந்து மனிதர்களின் வாழ்க்கையில் இறை அருள் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையே படம் பேசுகிறது. அதிரடி இல்லை, ட்விஸ்ட் இல்லை... ஆனால் பார்த்து முடித்ததும் மனசில் ஒரு அமைதி மிச்சமாகிறது. பொங்கல் நாளில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படம்.
இந்தாண்டு பொங்கல், தியேட்டரில் அமைதியாக இருந்தாலும், ஓடிடியில் ஒவ்வொரு ரசனையையும் குறிவைத்து வந்த படங்கள் & தொடர்கள் தான் உண்மையான ஹிட்! வீட்டிலிருந்தபடியே பொங்கலை முழுசாக என்ஜாய் செய்ய நினைப்பவர்களுக்கு - இந்த லிஸ்ட் போதுமானது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications