அங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ஒருத்தருக்கு ஒருத்தர் சூடு வைக்கும் வைபவம் இன்னும் நின்ன பாடில்லை. கல்யாண வைபோகம் நடக்குதோ இல்லையோ, கலவர வைபோகம் நல்லாவே நடக்குது.

முதல்ல முதல் சம்பந்திக்கு ரெண்டாவது சம்பந்தி கரண்டி காம்பு சூடு வச்சாங்களா... பதிலுக்கு ரெண்டாவது சம்பந்திக்கு முதல் சம்பந்தி தோசைக்கல்லு சூடு வச்சு, பின்னாடி வடிவேலு கூடை கட்டிக்கிட்ட மாதிரி இவங்க நைட்டிக்குள்ள டயர் போட்டுக்கிட்டு சுத்தினாங்களா...

Poor husband and brutal wife

அப்பவும் பழி வாங்கற ஆத்திரம் தீராம பயித்தியம்ங்க கிட்ட ஆஸ்பத்திரிக்கே போற மாதிரி முதல் சம்பந்தி ரெண்டாவது சம்பதியை மாட்டி விட்டாங்க. அதுக்கு ரெண்டாவது சம்பந்தியோட மாப்பிள்ளை கேலி பண்ணிட்டாராம்.

சரி மாப்பிள்ளைக்கு சூடு வைக்கணும்னு முதல் சம்பந்தி மாதிரியே பொண்ணு கூட சேர்ந்து தோசைக்கல்லை வச்சு சூடு வைக்க பிளான் பண்றாங்க ரெண்டாவது சம்பந்தி. மாப்பிள்ளை தன்னை அறியாமலே உஷாரா இருந்து, அந்த இடத்துல பொண்டாட்டியை ரெண்டாவது சம்பந்தி பொண்ணையே உட்கார வச்சுடறார்.

பாவம் பொண்டாட்டி சூடு வாங்கிட்டாளேன்னு மனுஷன் கவலையில இருக்க, அப்பயும் அடங்காத மாமியாரும், பொண்டாட்டியும் சேர்ந்துக்கிட்டு, கொள்ளிக்கட்டையில சூடு வைக்க புருஷனை துரத்தறாங்க. தனக்கு தோசைக்கல்லு சூடு பட்டும், புருஷனுக்கு சூடு போடணும்னு ஓடறா பொண்டாட்டி.

நல்லதொரு குடும்பம் கல்யாண வீடு குடும்பம் மாதிரி இருக்கணும்.. நடக்கட்டும் நடக்கட்டும் இப்படியான வைபோகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+