என்னங்க சொல்றீங்க.. பூவே உனக்காக 300 எபிசோட் தொட்டுருச்சா.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் 300 எபிசோடுகளை ரசிகர்களின் பேராதரவோடு கடக்கின்றது.
அதற்குள் 300 எபிசோட் வந்திருச்சா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் மேலும் மேலும் முன்னேறட்டும் என்று வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.
கதை களம் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் 300வது எபிசோடை கொண்டாடி இன்னும் விறுவிறுப்பு கூட்டுங்க என தங்களுடைய ஆசைகளையும் தெரிவிக்க தவறவில்லை.

அந்த நேரத்தை பிடித்த சீரியல்
சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்ப தொடங்கி ஒரு வருடத்தை கடந்த நிலையில் இதில் இரண்டு கதாநாயகன்கள் மாறிவிட்டனர். ஆனாலும் தற்போது இந்த சீரியலை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாக தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் இரு பெண்களின் நட்பிற்குள் அழகான காதல் எப்படி கொண்டு செல்கிறது என்பதில் தொடங்கி இப்போ முட்டல் மோதலில் சென்று கொண்டிருக்கிறது.

கண்ணாமூச்சி ஆட்டம்
கீர்த்தியும் பூவரசியும் பெஸ்ட் பிரண்டாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கதிரை காதலிக்கின்றனர். அதில் கதிர் கீர்த்தியை காதலிக்கிறார். ஆனால் பூவரசியுடன் அவருக்கு திருமணம் முடிந்து விடுகிறது. ஆனால் திருமணம் முடிந்த மறுநாள்தான் பூவரசிக்கு கதிரும் கீர்த்தியும் காதலித்த செய்தி தெரிகிறது. தன் தோழியின் மீது வைத்திருந்த பாசத்தின் காரணமாக கீர்த்தியை கதிர் உடன் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று தன் வாழ்க்கையை தியாகம் செய்ய துணிந்து விட்டார். ஆனால் பூவரசியை விடவும் கீர்த்தி அதிகமா பாசம் வைத்திருப்பதை நிரூபிப்பதற்காக கீர்த்தி செய்த செயல்தான் கதையின் திருப்பமாக அமைந்திருந்தது.

கீர்த்தி போய்ட்டாரா
கீர்த்தி கடலில் மூழ்கி இறந்து விட்டதாக வீட்டில் போட்டோவை எல்லாம் வைத்து அழுது கொண்டிருக்கும் போதுதான் கீர்த்தி பூவரசிக்கு எழுதி வைத்திருந்த லெட்டரை படித்திருக்கிறார். பூவரசிக்கும் கதிருக்கும் குழந்தை பிறந்த பிறகுதான் தான் வருவேன் என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல கதிரும் பூவரசியை காதலிக்க தொடங்கிய நேரத்தில் தான் பெரிய ஷாக் கிடைத்திருக்கிறது. பூவரசி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேள்விப்பட்டதும் கதிரால் அதிர்ச்சியை தாங்க முடியாமல் தான் இந்த குழந்தைக்கு அப்பா இல்லை என்று கூறிவிட்டார்.

மனுஷன் வெகுளியாய் இருக்காரே
ஆனால் பூவரசியும் தன் குழந்தைக்கு அப்பா கதிர்தான் என்பதை எடுத்துக்கூற முயற்சித்தும் பலன் இல்லை என்பதால் தாலியை கழற்றி கதிரின் முகத்திலே வீசிவிட்டு தன்னுடைய அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் இங்கே வந்த பிறகும் அந்த வீட்டுக்குள்ளே இருக்கும் அவருடைய உறவினர்கள் அவரை கொலை செய்ய முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள். கதிருக்கும் பூவரசியின் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது தான் என தெரிந்த பிறகு காதல் வந்து அவரிடம் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு பூவரசி ஒத்துக் கொள்வதே இல்லை. அதனால் பூவரசியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக இப்போ மிலிட்டரி மேன் கெட்டப்பில் பூவரசியின் வீட்டில் பாடிகாட் ஆக வேலை செய்து வருகிறார்.

கடுப்பு ஏத்தாதீங்க பாஸ்
பூவரசியை கொலை செய்வதற்கு முயற்சி செய்பவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பூவரசியை காப்பாற்றுவது தான் எனது குறிக்கோள் என்று மாறு வேஷத்தில் டிப்டாப் மிலிட்டரி ஆக பூவரசியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனை புடிக்காத பூவரசி இந்த வீட்டை விட்டு இவரை துரத்திவிட்டார். 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பது போல பூவரசி கதிரை வீட்டைவிட்டு துரத்தியதை பார்த்ததும் மகேஸ்வரிக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. இனி அடுத்த கட்டம் என்ன என்பதுதான் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

300 எபிசோடு வெற்றிதான்
சீக்கிரத்தில் பூவரசியும் கதிரும் சேர்வார்களா அல்லது மீண்டும் கீர்த்தி வருவாரா என்று பெரும் எதிர்பார்ப்போடு இந்த சீரியல் இப்போ 300 எபிசோடுகளை வந்தடைந்திருக்கிறது. டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து இந்த சீரியலை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவந்த சீரியல் டீமுக்கு ரசிகர்கள் 300 வது எபிசோட் வந்துவிட்டது. அதை சிறப்பாக கொண்டாடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அழுகாச்சி சீன்களை வைத்துக் கொண்டு இருக்காதீங்க ,கொஞ்சம் காதல், ரொமான்ஸ், காமெடி எல்லாம் வையுங்க என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

காத்திருக்கும் ரசிகர்கள்
300 எபிசோடுகளை கடந்து பூவே உனக்காக சீரியல் என டுவிட்டரில் போஸ்ட் போட்டு இருக்கின்றனர்.இதைப் பார்த்ததும் சீரியலில் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கம்போல நெட்டிசன்கள் தங்களுடைய பங்குக்கு அப்போ எப்போ இந்த சீரியலை முடிப்பீர்கள் என்று நக்கலாகவும் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு கதிர் பூவரசியை பாடாய் படுத்தினார். ஆனால் இப்போ பூவரசி கதிரை எப்படி வந்தாலும் ஏற்றுக் ஏத்துக்க மாட்டுக்காரே என்று கலாய்க்கின்றனர். இதுதான் கர்மா வா என்று கன்னாபின்னாவென கமெண்டுகளை அனுப்புகின்றனர்.

கையில் ஏந்தியபடி மாஸ் தான்
அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் இன்றைய எபிசோட் ப்ரோமோ வில் பூவரசியை கையில் தூக்கியபடி மிலிட்டரி மேன் ஆக நடிக்கும் கதிர் காரிலிருந்து இறக்கி வீட்டில் கொண்டுபோய் பத்திரமாக இறங்குகிறார். அதுவும் வீட்டிற்குள்ளே செல்லும்போது நான் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் உங்களுக்கு பிடிக்காது. ஆனால் எனக்கு வேற வழி இல்லை என்று சொல்லி வீட்டிற்குள்ளே கொண்டு சேர்த்து விட்டார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லாம் சந்தோஷமடைந்தாலும் இவர் அவரை இறக்கி விட்டு டாட்டா காட்டி வீட்டு வாசலுக்கு வந்துவிட்டார். அவரைப் போக வேண்டாம்னு சொல்லு என்று பூவரசியின் அம்மாவும் அப்பாவும் கூற பூவரசி மிலிட்டரி சார் என்று கூப்பிடுகிறார். இந்த வார்த்தைக்காக தானே காத்துக் கொண்டிருந்தேன் என்று உடனடியாக திரும்பிவிட்டார்..இதோடு இந்த ப்ரோமோ முடிந்திருந்தாலும் இதைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications