Postman: இந்த வெப்சீரிஸ் யாராச்சும் பாத்திருக்கீங்களா.. குறிப்பா ரஜினி ரசிகர்கள்?
சென்னை: கிட்டத்தட்ட கோமாளி படக் கதைதான். ஆனாலும் அப்படியே அப்பட்டமாக அதை காப்பி அடிக்காமல் படு ஜாலியாக கையாண்டுள்ளனர்.
போஸ்ட்மேன்.. இதுதான் இந்த வெப் சீரிஸின் தலைப்பு. முனீஸ்காந்த்தான் ஹீரோ. அவரது மகளாக வருகிறார் கீர்த்தி பாண்டியன். கதைப்படி போஸ்ட்மேனாக நடித்துள்ளார் முனீஸ் காந்த். ஜீ5 வெப் சீரிஸ் இது
இவர் அட்வான்ஸ்ட் ரஜினி முருகன். அதாவது தீவிர ரஜினி ரசிகர். எப்படின்னா ரஜினி என்றால் உயிர். அதைத் தவிர வேறு இல்லை. அப்படி ஒரு தீவிர ரசிகர்.

கோமாவில் இருந்து விழித்து
முனீஸ்காந்த் போஸ்ட்மேனாக இருக்கிறார். 23 வருடத்துக்கு முன்பு அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதில் சிக்கி கோமாவுக்குப் போய் விடுகிறார். 23 வருடத்திற்குப் பிறகு நினைவு வருகிறது. புது மனிதனாக உணர்கிறார். அவர் கண் விழிக்கும்போதே, நான் அரசியலுக்கு வருகிறேன். 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறேன் என்று ரஜினி பேசும் பேச்சு காதில் விழுகிறது.

பெண்டிங் லெட்டர்ஸ்
அப்படியே விழித்தெழும் முனீஸ்காந்த் தான் டெலிவரி செய்யாமல் சில கடிதங்களை வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.. அடடா மிஸ் ஆகிப் போச்சே என்று பதறும் அவர் அந்த லெட்டர்களை டெலிவரி செய்யக் கிளம்புகிறார். அப்போது ஒவ்வொரு கடிதம் மூலமாகவும் அவருக்கு ஒரு பூதம் கிளம்பி வருகிறது. இதை எப்படி அவர் சந்திக்கிறார் என்பதுதான் இந்த சீரிஸின் கதை.

நடிகை கீர்த்தி பாண்டியன்
உண்மையிலேயே செம ஜாலியாக எடுத்துள்ளனர். அதிலும் முனீஸ்காந்த் படும் பாட்டை அருமையாக சித்தரித்துள்ளனர். உருக்கம், நெகிழ்ச்சி, காமெடி, சோகம் என எல்லாவற்றையும் கலந்து கட்டி கொடுத்துள்ளனர். அதிலும் முனீஸ்காந்த் மகளாக வரும் கீர்த்தி பாண்டியன் நல்லா நடித்துள்ளார். அவருக்கு பெரிய திரையில் ஏன் வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்று ஆச்சரியமாக உள்ளது.

கோமா புள்ளிகள் ஆரம்பம்
கோமாளி படத்தின் கதை வேறு.. இந்த போஸ்ட்மேன் கதை வேறு. இரண்டுமே கோமா என்ற ஒற்றைப் புள்ளியில் நிற்கின்றனவே தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. மாறாக இரு வேறு விதமான கதைக் களத்தில் இயங்கியுள்ளன. கோமாளி எப்படி ரசிகர்களைக் கவர்ந்ததோ அதேபோல இந்த போஸ்ட்மேனும் சிறப்பாக உள்ளது. போன வருடம் வந்த சீரிஸ்தான்.. ஆனால் இப்போதும் ரசித்துப் பார்க்கும்படி உள்ளது.

சூப்பர் முனீஸ்காந்த்
முனீஸ்காந்த் ஒரு சிறப்பான நடிகர் என்பதில் சந்தேகமில்லை. காரணம் இந்த தொடரின் பல இடங்களில் காட்சிக்கேற்ப அப்படியே மாறியுள்ளார். அதிலும் உடன் நடித்த பிற நடிகர்களும் நல்ல அனுபவம் மிக்க நடிகர்கள்தான். குறிப்பாக நித்யா. பல டிவீதொடர்களில், திரைப்படங்களில்நடித்த அனுபவம் கொண்ட நிந்தியா இந்த தொடரிலும் சிறப்பான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நல்லா பொழுது போகணும்.. கூடவே திருப்பங்களும் இருக்கணும் நினைச்சா இந்த தொடரைப் பாருங்க.. கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க.












Click it and Unblock the Notifications