பவுர்ணமி போலீஸ் ஸ்டேஷன்ல.. அப்பா இப்படி இருக்காரே!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் நிஜமா பெத்த பெண்ணை சுத்தமா விரும்பாத அப்பாவும் இருப்பாரான்னு கேள்வி கேட்கற மாதிரியான கதையா இருக்கு.
ரொம்ப காதலிச்ச மனைவி,பவுர்ணமி பிறந்த உடனே இறந்து போயிடறா. இதுக்கு ராசி இல்லாத பவுர்ணமிதான் காரணம்னும் ,பவுர்ணமி ஒரு ராசியில்லாத பொண்ணுன்னும் அப்பா சக்ரவர்த்தி அவளை வெறுக்கறார்.

பெத்த பொண்ணு மேல உங்க வீட்டு வெறுப்பு எங்கவீட்டு வெறுப்பு இல்லைங்க உலகமகா வெறுப்பு. ஆனா,ரெண்டாம் தாரத்து மகளான பவானி மேல அப்பாவுக்கு உசிரு.
அப்பா என்ன சொன்னாலும், என் முகத்துல முழிக்காதேன்னு சொன்னாலும், அப்பான்னா பவுர்ணமிக்கு உசிரு. படிப்புல கெட்டிக்காரி, வேலை செய்யறதுல கெட்டிக்காரி.
பவுர்ணமி யுனிவர்சிட்டி முதல் வந்ததுக்கு பொறாமையோடு பொக்கே குடுக்க வர்றா பவுர்ணமின் தோழி. பவுர்ணமிக்கு அடுத்து இவதான் அதிக மார்க்.
பவுர்ணமிக்கு எடுத்துட்டு வந்த பொக்கேவை தூக்கி எரிந்து தோழியை அவமானப்படுத்தி அனுப்பறார் பவுர்ணமியின் அப்பா.பதிலுக்கு உனக்கு பார்த்த டே பார்ட்டின்னு சொல்லி ஒரு இடத்துக்கு வர சொல்லு.அவளை பிரார்த்தல் கேசுல உள்ள தள்ளிருவோம்னு,தோழியின் அப்பா ஐடியா தர்றார்.

அதே போல நடக்க ,இப்போ பவுர்ணமி போலீஸ் நிலையத்தில்..தன் அப்பா தொழிலதிபர் சக்ரவர்த்தி. அவரைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். .வேணா போன் பண்ணி கேட்டு பாருங்கன்னு சொல்லிட்டு கதறி அழறா.
அப்பாவும் போன் பண்ணினவுடனே வர்றார். தன் சின்னப் பொண்ணை போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிருச்சுன்னு. என் பொண்ணை எப்படி அரெஸ்ட் பண்ணலாம்னு அவர் கத்த, பவுர்ணமியை வெளியே கொண்டு வர,சிலையா நிக்கறார் அப்பா..

பவுர்ணமி அப்பா அப்பான்னு கதற..இவ என் பொண்ணு இல்லையேன்னு சொல்லிட்டு வந்துடறார். வீட்டுக்கு வந்து சாப்பிட மனசு இல்லை.செத்து போன பொண்டாட்டி போட்டோ முன்னால நின்னு, நான் வேற பொண்ணுன்னு நினைச்சாவது காப்பாத்தி இருக்கணும்.தப்பு பண்ணிட்டேன்னு புலம்பறார்.
பவுர்ணமி ஜெயிலில் இருப்பது ,சித்தி, தங்கச்சி, பாட்டி யாருக்கும் இன்னமும் தெரியாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications