பிரபுதேவா மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டார்..! நடிகர் சஞ்சீவ் மனைவி பிரீத்தி பதிவு! இணையத்தில் வெடித்த விவாதம்
சென்னை: டான்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர்களில் ஒருவர் பிரபுதேவா. இந்தி சினிமாவில் பல தலைமுறைகளை ஆட வைத்தவர். ஆனால் தற்போது அவர் ஆடிய ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. அவர் ஆடியதில் தவறு இருக்கிறது என்று நடிகர் சஞ்சீவ் மனைவியான நடிகை ப்ரீத்தி போஸ்ட் போட்டு இருக்கிறார். அது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனது மறைந்த குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணன் 100வது பிறந்தநாள் நிகழ்வு நிகழ்ச்சியில் குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரபுதேவா பரதநாட்டியம் ஆடினார். இது ஒரு கலை அஞ்சலியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருந்தது.
நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் போஸ்ட்
இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ்வின் மனைவியும் பரதநாட்டியம் பயிற்சி பெற்றவருமான ப்ரீத்தி சஞ்சய் வெளியிட்ட பதிவில், பாரம்பரிய நடனம் மட்டும் தான் மீண்டும் மீண்டும் தவறாக ஆடப்பட்டாலும் மக்கள் கேள்வி கேட்காமல் பாராட்டும் ஒரே கலை வடிவமாக இருக்கிறது. பிரபுதேவா இப்படி மன்னிக்க முடியாத தவறை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்பை பரதநாட்டியத்தில் முறையாக பயிற்சி பெற்ற ஒரு இளம் கலைஞருக்கு கொடுத்திருக்கலாம் என்று கருமையாக விமர்சித்திருக்கிறார்.

பிரபுதேவா பரதநாட்டியம்
அவரது இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவு வெளியானதும் பிரபுதேவாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரிடம் பல வருடங்களாக டான்ஸ் கற்ற டான்ஸ் மாஸ்டர்கள், சிஷ்யர்கள் என பலரும் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.
பிரபுதேவாவுக்கு சப்போர்ட்
அதில், பிரபுதேவா யாரென்று தெரிந்துதான் பேசணும்... அவர் வரும் சினிமா டான்சர் இல்லை. கிளாசிக்கல் அடித்தளம் இருந்ததால்தான் உலகமே கொண்டாடும் டான்ஸராக உயர்ந்திருக்கிறார். குருவுக்கு மரியாதை செலுத்தி ஆடிய நிகழ்ச்சியை கூட விமர்சிப்பது தேவையா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சில கலைஞர்கள் அது அரங்கேற்றம் அல்ல, குருவுக்கான அஞ்சலி. அந்த சூழலை புரிந்து விமர்சிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அதுபோல பரதநாட்டிய கலைஞர்களில் ஒரு சிலர் ப்ரீத்தியின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுடைய வாதம் என்னவென்றால், சினிமா நடனமும் பரதநாட்டியமும் வேறு. பாரம்பரிய கலை வடிவத்தில் இலக்கணங்கள் காக்கப்பட வேண்டும். யார் ஆடினாலும் அதே அளவுகோல் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
பிரபுதேவா என்ற பெயருக்கு தனி அறிமுகம் தேவை இல்லை. இந்திய சினிமாவில் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு தனித்துவமான டான்ஸ் பாணியை உருவாக்கியவர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன். சினிமாவில் அறிமுகமான அவர் நடனம் இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு டான்ஸ் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பேசிய பேட்டி ஒரு பக்கம் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் நிலையில் பிரபுதேவாவுக்கு சப்போர்ட்டாகவும் சினிமா துறையில் இருந்து பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
