Dragon: அப்போ டிராகன் சுட்ட படமா? 2018- லயே வந்த படத்தை இப்படி மாற்றி வச்சிருக்காங்களா? இதை கவனிச்சீங்களா?
சென்னை: இப்போ இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டாராக வலம் வருவது பிரதீப் ரங்கநாதன் தான். அவர் நடிச்ச படம் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிட்டு இருக்கு. ஆனால் சமீபத்தில் வந்த டிராகன் படம் தான் இப்போ மீண்டும் ட்ரோல் ஆகுது. என்னன்னா இந்த படம் வெளியாவதற்கு முன்பு 2018 இல் ஒரு படம் வெளியாகி இருக்கு, அந்த படத்தில் கதையைத்தான் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து டிராகனாக எடுத்து வச்சிருக்காங்க. அது பற்றி பார்ப்போமா.
டிராகன் படம் ஓடிடியிலும் வந்து விட்டதால பலரும் பார்த்திருப்பீங்க. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடித்திருந்தார்., கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கயோடு லோகர், விஜே சித்து, மிஸ்கின், கே எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதிலும் இந்த படத்தின் பாடல்கள் கூட பலருடைய ரிங்க்டோனாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் கதைன்னு எடுத்துக்கிட்டா காலேஜ் படிக்கும் போது ஊதாரி தனமாக டிராகன் என்ற பெயரில் வலம் வரும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் 48 அரியர் வைத்திருக்கிறார். ஆனால் வீட்டில் தான் டிகிரி முடிச்சிட்டேன் வேலைக்கு போயிட்டு இருக்கிறேன் என்று சொல்லிட்டு தன்னுடைய நண்பர்கள் ரூமில் போய் தங்கி இருக்கிறார். பிறகு அவர் காதலிச்ச பொண்ணு அவரை விட்டுட்டு போயிருவாங்க. அப்போது அந்த பெண்ணின் கணவரை விட ஒரு ரூபாய் அதிகமா சம்பாதிக்க வேண்டும் என்று போலி சான்றிதழ் தயாரிச்சு ஒரு ஆபீஸில் வேலைக்கு போவாரு.
ஹீரோவுக்கு ஆபீஸில் அதிகமா சம்பளம் கிடைச்ச நேரத்துல ஃபேமிலி மூலமாக பல்லவி என்ற பெண்ணுடன் திருமணம் முடிவாகிறது. அந்த நேரத்தில் அவருடைய பிரின்சிபல் நீ உண்மையாக பாஸ் ஆகலனா உன்னை பத்தி எல்லாருக்கும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறார். அதனால் அவர் படிச்ச அதே காலேஜில் மீண்டும் படிக்க போவாரு. கடைசியில் பாஸ் ஆகி ரிசல்ட் வந்த நேரத்தில் தான் செய்த தப்பு என்று உணர்ந்து எல்லாரிடமும் உண்மையை சொல்லிடுவாரு. இதுதான் டிராகன் படத்தின் கதை.
ஆனால் இதே கதை கடந்த 2018 லேயே ஒரு படத்தில் வந்திருக்கிறது. அந்த படத்தின் கதை என்னன்னா ஹீரோ ஸ்கூல் படிக்கும்போது தன்னோடு படிக்கும் மாணவர்களை புள்ளி பண்ணிட்டு எக்ஸாம் கூட எழுதாமல் ட்ராப்பர் ஆகி இருக்கிறார்கள். பல வருஷம் கழிச்சு ஒரு கம்பெனில சேல்ஸ் ஆபீஸரா வேல பாக்குறாரு அந்த கம்பெனி ஓனருக்கு அவரை பிடித்து போயிடுது. இதற்கிடையில் ஒரு பொண்ண காதலிக்கிறாரு.
திடீர்னு வேலை ஹீரோ வேலை பார்க்கும் அந்த கடை எரிஞ்சு போயிடுது. அதனால அவருக்கு வேலை இல்லாம போனதும் அவரோட பிரண்டு என்னோட ஆபீஸ்ல உனக்கு ஒரு வேலை வாங்கி தரேன் நல்ல சம்பளம் கிடைக்கும் ஆனால் அதற்கு நீ டிகிரி முடிக்கணும்னு சொன்னதும் ஹீரோ தன்னுடைய லவ்வர் கிட்ட எனக்கு வேலை கிடைச்சுதுன்னு பொய் சொல்லி காலேஜ்க்கு போறாரு. அங்கு இவர் புள்ளி பண்ணின பையன் தான் பிரின்ஸ்பலா இருக்கிறார்.

எப்படியாவது டிகிரி வாங்கணும்னு ஹீரோவும் பார்ட் டைம் வேலை பார்த்து அங்க படிச்சிட்டு இருக்காரு. அந்த நேரத்தில் இவர் டிகிரி வாங்கலன்னு இவருடைய காதலிக்கு தெரிஞ்சதும் அவங்க வேண்டாம்னு விட்டுட்டு போயிடுறாங்க. அப்புறம் போராடி டிகிரி வாங்குகிறார். அப்போதான் வாழ்க்கையில் எல்லாருக்கும் இரண்டாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதை நல்லா யூஸ் பண்ணிக்கனும் என்ற டயலாக் வருகிறது.
கடைசியில் ஹீரோ கூட அவருடைய காதலி சேர்ந்துட்டாங்க, இதுதான் 2018 இல் வந்த நைட் ஸ்கூல் (night School) படத்தோட கதை. இந்த படத்தில் இருந்து தான் டிராகன் படத்தை எடுத்து இருக்காங்க... ஆனா ப்ரோமோஷன் போது இயக்குனர் தன்னுடைய சொந்த படம்னு உருட்டிட்டாரு என்று இப்போ சோசியல் மீடியாவில் பலரும் கலாச்சிட்டு வராங்க. நீங்க டிராகன் படம் பாத்துட்டீங்களா? அந்த படத்தில் உங்களுக்கு பிடிச்ச காட்சி எது பாஸ்?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications