தீபாவளி ரேஸில் நான் தான் ராஜா! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' மாஸ்! முதல் நாள் கலெக்ஷன் 10 கோடி இலக்கு!
சென்னை: இந்த வருடம் தீபாவளிப் பண்டிகைக்குப் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகாத நிலையில், இளம் நடிகர்களான பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண், ஆகியோரின் படங்கள் மோதுவதால் பாக்ஸ் ஆபிஸ் பரபரப்பாகியுள்ளது. இதில், பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' (Dude) படம் தான் ஓப்பனிங்கில் பட்டையைக் கிளப்பப் போவதாக வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தீபாவளி ரேஸில் 'டியூட்' முன்னிலை
இந்த தீபாவளிக்கு, பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' உட்பட, துருவ் விக்ரமின் 'பைசன்', மற்றும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகின்றன. பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் இல்லாததால், இது இளம் நடிகர்கள் தங்களை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
திரைத்துறை ஆய்வாளர் இது குறித்துப் பேசுகையில், பிரதீப் ரங்கநாதனின் முந்தையப் படங்களான 'லவ் டுடே' மற்றும் பிளாக்பஸ்டர் 'டிராகன்' ஆகிய படங்களின் வெற்றி காரணமாக, இந்தப் பட்டியலில் பிரதீப் தான் மிகப்பெரிய ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் வசூல் இலக்கு
'டியூட்' படத்திற்கு கிடைத்திருக்கும் ஆரம்ப கட்ட வரவேற்பு குறித்தும், அதன் வசூல் குறித்தும்வெளியான தகவல் படி, "'டிராகன்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, 'டியூட்' படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது". தற்போதைய முன்பதிவு நிலவரங்களைப் பார்க்கும்போது, 'டியூட்' திரைப்படம் முதல் நாளில் ரூ 8 கோடி முதல் 10 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது
பிற படங்கள்
அதே சமயம், மாரி செல்வராஜின் 'பைசன்' மற்றும் ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' ஆகிய படங்கள் ஒவ்வொன்றும், 3 கோடி முதல் 4 கோடி வரை மட்டுமே வசூல் செய்யும் என்று ரமேஷ் பாலா எதிர்பார்க்கிறார். இதன் மூலம், இந்தத் தீபாவளி போட்டியில் பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படம் தான் தெளிவாக முன்னணியில் உள்ளது என்று தெரிகிறது.
பெரிய பிளஸ் பாயிண்டுகள்
'டியூட்' படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த மிகப்பெரிய ஓப்பனிங் எதிர்பார்ப்புக்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன:
1. பான் இந்தியா வெளியீடு: 'டியூட்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது. குறிப்பாக, தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டுச் சந்தைகளிலும் தெலுங்கு டப்பிங் பதிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஓடிடி ஒப்பந்தம்: இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இதன் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிரதீப் ரங்கநாதனின் படங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய டிஜிட்டல் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் படத்தின் தயாரிப்பு செலவே கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், மலையாள நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மொத்தத்தில், இந்தத் தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு "டியூட்" ஆக அமையப் போகிறது!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications