Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் லீக் செய்தது விஜயா? மனசாட்சி வேண்டும்! 500 கோடி! ஆதங்கத்துடன் பேசிய பிக் பாஸ் பிரஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், அரசியல் களத்தில் சினிமா பிரபலங்களின் கருத்துகளும் பெரிதாக கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான பிரஜன் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Prajan Vijay Jananayagan bigg boss

பிரஜன்

செய்தியாளர்களை சந்தித்த போது, பிரஜன் மிகவும் ஓபன் ஆக, "இந்த தேர்தலில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கு. எனக்கும் அதே ஆசை தான். நான் இதுவரை பலருக்கு ஓட்டு போட்டிருக்கேன். சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கலாம், ஆனா நிறைய விஷயங்கள் நடக்காமயே போயிருக்கு. அதனால இந்த முறை ஒரு புதிய வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்ற எண்ணம் எனக்கு இருக்கு. என் ஓட்டு விஜய் சாருக்குத்தான்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், விஜயகாந்த் கூறிய "வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியும்" என்ற கருத்தையும் நினைவுபடுத்தி, அதே அடிப்படையில் தான் தனது முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் சர்ச்சை

சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து பேசும்போது, பிரஜன் மிகவும் தெளிவாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார்: "ஒரு நடிகராக நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். ஒரு படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பு லீக் ஆகுவது மிகவும் வருத்தமான விஷயம். நான் அந்த படத்தை தியேட்டரில் தான் பார்க்க விரும்புகிறேன். ஆன்லைனில் பார்க்க மாட்டேன்" என்று கூறினார்.

விஜய்க்கு ஆதரவு

படம் லீக் ஆனதற்கு விஜய் காரணம் என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். "விஜய் சார் மாதிரி ஒரு நடிகர் இதை பண்ணுவார் என்று நான் நம்பவே மாட்டேன். அவருக்கு அதில் எந்த லாபமும் இல்லை. ஒரு தயாரிப்பாளர் 500 கோடி செலவு பண்ணி படம் எடுத்து இருக்கிறார். அவர் தானே அதை லீக் பண்ணுவார் என்பதும் சாத்தியமில்லை. இது முழுக்க முழுக்க தவறான குற்றச்சாட்டு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கொடுக்கணும்

பிரஜன் தனது பேச்சில், விஜய் அரசியல் பயணத்தை பற்றி பேசும் போது, "விஜய் இளைஞர்களுக்காக பல விஷயங்கள் செய்யணும் என்று சொல்றார். அதனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம். மாற்றம் வரணும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கு. அதே ஆசை எனக்கும் இருக்கு" என்று அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எதிரொலி

பிரஜன் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு தரப்பினர் அவரின் நேர்மையான கருத்தை பாராட்ட, மற்றொரு தரப்பினர் இதை அரசியல் ஆதரவு என விமர்சித்து வருகின்றனர்.

2026 தேர்தல் சூழலில், சினிமா பிரபலங்களின் ஒவ்வொரு கருத்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், பிரஜன் வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற கருத்துக்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதும், அதனால் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+