சில திமுக சொம்பு நடிகர் மாதிரி அஜித் இல்ல.. விஜய் சேதுபதியை தாக்கி பிரசாந்த் ரங்கசாமி சர்ச்சை பேச்சு
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த ஒரு லீடர்ஷிப் பிரச்சனை வெளியே வந்ததும் அரசியல் விவாதமாக மாறி இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது. முதல் வாரத்தில் ஷாதிகாவின் தலைமை குறித்து விஜய் சேதுபதி பேசிய சில கருத்துக்கள் விஜய்க்கு எதிரான மறைமுக விமர்சனமா? என்ற கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே வெளியேற்றப்பட்ட பிரசாந்த் ரங்கசாமி விஜய் சேதுபதி தாக்கி அஜித்தை பாராட்டுவது போல பேசியதும் வைரலாகி வருகிறது.
திரைவிமர்சகர் பிரசாந்த் பேச்சு
திரைப்பட விமர்சகர் பிரசாந்த் வெளியிட்ட பதிவில், கரூர் சம்பவத்துக்கு அப்புறம் விஜய் சாரை காலி பண்ணனும்னு பலரை விலைக்கு வாங்கி அறிக்கை விட வச்சாங்க. ஆனா விலை போகாத ஒரே ஆள் அஜித் சார் தான். தேர்தல் அப்பவே அவர் விஜய் சாருக்காக நிற்கிறார் என்று திமுகவுக்கு தெளிவாக தெரிஞ்சு போச்சு.. இப்போ இருக்க சொம்பு நடிகர் இருக்கிறார்ல.. சம்பந்தமே இல்லாம மேடையை பயன்படுத்தி கத்திட்டு இருக்கிறாரே.. ஒரு சொம்பு நடிகர்.. அவர மாதிரி அஜித் சாரும் சொம்பு அடிப்பாருன்னு நினைச்சாங்க.
ஆனா அஜித் சாரை காசு வச்சி எல்லாம் விலைக்கு வாங்கவே முடியல. அந்த நட்புக்காக தான் அஜித் சார் கூப்பிட்ட உடனே விஜய் சார் லண்டன் போய் இருக்கிறார் என்று விமர்சனம் பிரசாந்த் கூறியிருக்கிறார். அவர் இப்படி சொன்னதும் அஜித்தை பாராட்டுறீங்களா? இல்ல விஜய் சேதுபதியை தாக்குறிங்களா? என்று பலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசும்போது, மக்கள் 2 சொட்டு கண்ணீர் விட்டு ஏமாற்றியதும் பின்னாடி போகிடாதீங்க என்று பேசியதும் சர்ச்சையாக பரவி வரும் நிலையில் அவர் முதல்வர் விஜயை சொன்னார் என விஜய் ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை திட்டி வருகிறார்கள். இதற்கு முன்பு விஜய் சேதுபதி திமுகவுக்கு ஆதரவாக பேசிய சம்பவங்களை எல்லாம் இப்போது தொடர்பு படுத்தி பேசி வரும் நிலையில், திமுக சொம்பு என விஜய் சேதுபதியை தான் பிரசாந்த் ரங்கசாமி பேசியிருக்கிறாரா என்ற கேள்விகளை சிலர் எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் கேள்வி
அதோடு சிலர் நீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் நாளே அனுப்பப்பட்ட கடுப்புல இப்போ விஜய் சேதுபதியை இப்படி திட்டறீங்களா பாஸ்? ஒருவேளை பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இதே போல மேடையில் விஜய் சேதுபதியிடம் நீங்க திமுக சொம்பு என்று சொல்வாரா? என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.
இன்றும் பிக் பாஸில் சம்பவம் இருக்கு.. மீண்டும் ஜனநாயகம் பற்றி பேசிய விஜய் சேதுபதி
ஏற்கனவே லண்டனில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்துக்காக விஜய் கலந்து கொண்டது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி அவரை திட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில், இவர் அஜித்தை பாராட்டி பேசினாலும் நெட்டிசன்கள் வழக்கம் போல இவரை ட்ரோல் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. எது எப்படியோ பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்தால் லீடர்ஷிப் பஞ்சாயத்து வெளியே விஜய், அஜித், விஜய் சேதுபதி என சினிமா அரசியலையும் சுற்றி வருகிறது. ஆனால் இதில் பதில் சொல்ல வேண்டிய விஜய் சேதுபதி எந்த விளக்கமும் கொடுக்காமல் கூலாக இருப்பதுதான் அதிசயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
