இளையராஜாவுக்காக காத்திருந்த உயிர்! கதவை திறந்ததும் போயிருச்சு.. மலேசியா வாசு பற்றி மகள் உருக்கம்
சென்னை: பாடகர் மலேசியா வாசுதேவன் இறப்பதற்கு முன்பு படுக்கையில் இருந்தபோது பட்ட வேதனையும், மலேசியா வாசுதேவனை பார்ப்பதற்காக இளையராஜா வந்தபோது நடந்த சம்பவம் பற்றியும் மலேசிய வாசுதேவனின் மகள் பிரசாந்தினி பகிர்ந்திருக்கிறார்.
ஒரு சில பாடல்கள் கேட்கும் போது இது மலேசியா வாசுதேவன் பாடியதா? அல்லது எஸ்பிபி பாடியதா? என்று குழப்பம் அடைய செய்யும் அளவிற்கு அவர்கள் இருவருடைய குரலும் ஒரே போல இருக்கும். மலேசியா வாசுதேவனுக்கு கமல் மற்றும் ரஜினி நடிப்பில் உருவான 16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல் பெரிய அளவில் புகழ் பெயர் வாங்கி கொடுத்தது.

மலேசியா வாசுதேவன் அன்னபூரணி என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதில் யுகேந்திரன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல பாடலும் பாடியிருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதுபோல மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய தந்தை மலேசியா வாசுதேவனின் கடைசி காலம் பற்றி இந்தியா கிளிட்ஸ் youtube சேனலில் கண் கலங்க பேசியிருக்கிறார். அப்பாவின் உடல்நிலை சரியில்லாமல் ஆகி அவர் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் எல்லோரும் அவரை பார்க்கப் போயிருந்தோம்.
அப்போது அவரால் பெரிதாக பேச முடியவில்லை. எங்களை பார்த்தவுடன் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அவர் அழுவதை பார்த்து எங்களுக்கும் அழுகை வந்தது. ஆனாலும் அவரிடம் அதை காட்டிக் கொள்ளவில்லை. நாம அந்த இடத்தில் அழுதால் அவர் இன்னும் சங்கடப்பட்டு அவரின் உடல்நிலை மோசமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதனால் நாங்கள் மீண்டும் வந்து விடுவீர்கள் என்று ஆறுதல் சொன்னோம்.

ஆனால் எங்களுடைய துரதிஷ்டம் அவர் வரவே இல்லை. அவர் உயிர் இளையராஜா சாருக்காக தான் காத்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் ராஜா சார் மருத்துவமனைக்கு வந்தார். அப்பா இருந்த ரூமின் கதவை திறந்து அவர் உள்ளே வந்தவுடன் அப்பாவின் உயிர் பறிபோனது.
ராஜா சார் வாசு என்றெல்லாம் கூப்பிட்டு பார்த்தார். ஆனால் அவர் எழுந்திருக்கவே இல்லை. ராஜா சாரின் முன்னிலையில் தான் அவருடைய முகத்தில் வைக்கப்பட்டு இருந்த டியூப் எல்லாவற்றையும் கழட்டினார்கள். அந்த நிகழ்வை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. நான் அப்பாவுக்கு மிகுந்த செல்லம். அதனால் அப்பா இறந்துவிட்டார் என்பதை என்னால் முழுசா ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்ப வரைக்கும் அப்பா ஒரு பாட்டு கச்சேரிக்கு போயிருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்பதை நான் நினைத்து விட்டால் என்னால் வேறு எந்த காரியத்தையும் செய்ய முடியாது. அதனால் அப்படிப்பட்ட அந்த சூழ்நிலைக்கு நான் போக மாட்டேன் என்று அந்த பேட்டியில் பிரசாந்தினி எமோஷனலாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
