பிக் பாஸை விட்டு விஜய் சேதுபதி விலக போகிறார்! உள்ளே நடக்கும் சம்பவம் இதுதான்! பிரபலம் பேசிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, இந்த முறை ஆரம்பம் முதலே 'வாட்டர் மிலன் ஸ்டார்', 'பலூன் அக்கா' எனச் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இயக்குநரும் நடிகருமான பிரவீன் காந்தி, நிகழ்ச்சி குறித்தும், தொகுப்பாளர் விஜய் சேதுபதி குறித்தும் பேசியுள்ள கருத்துக்கள் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய கிண்டலைப் கிளப்பியுள்ளது.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

பிக் பாஸ் வீடும், தெரியாத முகங்களும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்துப் பேசிய பிரவீன் காந்தி, இந்த சீசனின் தேர்வைப் பற்றிக் கிண்டல் செய்துள்ளார். தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 'வாட்டர் மிலன் ஸ்டார்' திவாகர், 'பலூன் அக்கா' அரோரா, 'அகோரி' கலையரசன் உள்ளிட்ட பலர் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுயுள்ளனர்.

பிரவீன் காந்தியின் நிலை

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன், தனக்கு அங்கு யாரையுமே தெரியாது என்று பிரவீன் காந்தி கூறியுள்ளார். இயக்குநர் அகத்தியன் சாரோட பொண்ணு கனியை மட்டும்தான் தனக்குத் தெரியும் என்றும், அவர் தனக்குத் தங்கை போன்ற உணர்வைத் தந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'வாட்டர் மிலன் ஸ்டார்' திவாகர் பற்றிப் பேசிய அவர், "சமூகவலைதளங்களில் நல்லதை விடக் கெட்டதுதான் அதிகமாகத் தெரியும். அதுபோலத்தான் திவாகர்" என்று கூறியிருப்பது, அவர் திவாகரை எப்படிப் பார்க்கிறார் என்பதைக் கிண்டலாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

இவருக்கு பக்குவம் வரவில்லை

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில், முன்னாள் தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கும், இப்போதைய தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைச் சுட்டிக்காட்டி பிரவீன் காந்தி பேசியிருப்பதுதான் இப்போது மிகப்பெரிய விவாதப் பொருள். கமல்ஹாசன் போட்டியாளர்கள் பேசுவதற்கு நேரம் கொடுப்பார், தவறுகளைப் பக்குவமாகக் சுட்டிக் காட்டுவார் என்று பிரவீன் காந்தி ஒப்பிட்டுள்ளார்.

ஆனால், விஜய் சேதுபதிக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்றும், அவர் இந்த சீசன் பாதியிலேயே கிளம்பிவிடுவார் என்றும் பிரவீன் காந்தி கூறியிருப்பது, ரசிகர்களைப் பெரிய அளவில் யோசிக்க வைத்துள்ளது.

மக்கள் ஓட்டு இல்லை

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் இல்லை என்று பிக் பாஸ் குழு சொன்னாலும், அது குறித்த தனது கருத்தை பிரவீன் காந்தி தைரியமாகப் பேசியுள்ளார். உள்ளே அனைவரும் நடந்துகொள்ளும் விதம் உண்மையான ஒரிஜினல் தான். ஆனால், யார் உள்ளே இருக்க வேண்டும், யார் வெளியே போக வேண்டும் என்ற முடிவு செய்வது மக்கள் அல்ல, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் என்று அவர் அடித்துக் கூறியுள்ளார். மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யும் முடிவுதான் இறுதியானது என்று கூறியிருப்பது, பிக் பாஸ் வாக்களிப்பு முறையையே கிண்டலுக்குள்ளாக்கியுள்ளது.

பிரவீன் காந்தியின் கணிப்பு

"என்னை தவிர வேறு யாரையாவது வெளியில் அனுப்பியிருந்தால், பிக் பாஸ் இவ்வளவு பெரிய பிரபலம் ஆகியிருக்காது" என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவர் பற்றிய விமர்சனங்களையும் ஸ்போட்டீவாக எடுத்துக் கொண்டதாகவும் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

மேலும், இந்த வாரம் ஆதிரை அல்லது அப்சரா ஆகியோரில் யாராவது ஒருவர் எலிமினேட் ஆவார் என்றும் அவர் கணித்துள்ளார். மொத்தத்தில், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு 'ரிப்பேரான' தேர்வுகளுடன் ஆரம்பித்து, தொகுப்பாளரின் பக்குவமின்மை வரை விமர்சிக்கப்படுவது, நிகழ்ச்சியின் தரத்தை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+