என் கணவரை வெளியில் ரசிக்கிற மாதிரியே பிக்பாஸ் உள்ளேயும் ரசிக்கணும்....சஞ்சீவின் மனைவி ஆசை
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் சஞ்சீவ் கலந்து கொண்டதை தொடர்ந்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார் அவருடைய மனைவி பிரீத்தி.
Recommended Video
சின்னத்திரை ஜோடிகளான ப்ரீத்தி மற்றும் சஞ்சீவ் தம்பதிகள் பலருக்கும் பரிச்சயமானவர்கள் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறதோ என்று குழப்பத்தோடு அவர் பேசிய வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

சஞ்சீவின் என்ட்ரி
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பலருக்கும் பரிச்சயமான நபராக இருக்கும் சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவருடைய என்ட்ரி அனைவரையும் அதிர வைத்து விட்டது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து இவர் கொள்வார் என்று பலமுறை ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்தனர். தற்போது அது நடைபெற்று விட்டது. இவருடைய என்ட்ரியால் இந்த நிகழ்ச்சியில் என்ன மாதிரி மாற்றம் நடைபெறும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிகரிக்கும் ரசிகர்களின் ஆதரவு
சஞ்சீவ் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ப்ரீத்தியும் சின்னத்திரையில் பிரபலமான ஒரு நடிகை தான். இப்ப வரைக்கும் பல சீரியல்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தொடர்ந்து அவர் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய என்ட்ரியை பார்த்ததும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பல பேன்ஸ் பேஜ்க்களை ஓபன் செய்து விட்டனர்.

ராஜுவுக்கு பாதிப்பு இருக்குமா??
விஜயின் தீவிரமான நண்பராக இருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் விஜய்யின் ரசிகர்களும் இவருக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவரை சின்னத்திரையிலும் பல வருடங்களாக பலருக்கும் தெரியும். ஏற்கனவே சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்து தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ராஜுவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகுவார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதனால் சஞ்சீவி வருகையால் ராஜுவுக்கு இனி ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்றும் சில ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மனைவியின் ஆசை
தன்னுடைய கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தொடர்ந்து வெளியே இருக்கும் போது எப்படி அவரை ரசித்துக்கொண்டு இருந்தேனா, அது போல பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவரை ரசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் தலையெழுத்து எப்படி மாறப்போகிறது என்று தெரியவில்லை என்று ப்ரீத்தி கூறியிருக்கிறார். இவருடைய இந்த வார்த்தையை கேட்டதும் ரசிகர்கள் அதிகமாக அவருக்கு சப்போர்ட் மற்றும் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் 'ஐ லவ் மை பாஸ்' என்று சஞ்சீவ்க்கு வாழ்த்துக் கூறி போஸ்ட் போட்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை அளித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications