வதந்திகளுக்கு பதிலடி, பிரேம்ஜி- இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம், குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனப் பல முகங்களைக்கொண்ட ஒரு தனித்துவமான கலைஞரில், பிரேம்ஜியும் ஒருவர். அவருடைய ஒவ்வொரு படத்திலும் 'மாமன்'னு கூப்பிடுறதுக்கும், 'கவலைப்படாதீங்க'னு சொல்றதுக்கும்ன்னே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. இப்படி, சினிமாவில் ஒரு காமெடி மன்னனாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு, இப்போ ஒரு பெரிய மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. அவர் அப்பாவாகிவிட்டாராம்! இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

முழுமையான சினிமாக்காரன்
பிரேம்ஜி, தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கங்கை அமரன் அவர்களின் மகன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி. 2003-லிருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், 2005-ல் வெளியான 'ஞாபகம் வருதே' படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்குப் பிறகு, பல படங்களுக்கு இசையமைத்தார்.
அவர் நடிப்புல ஒரு திருப்புமுனையா அமைந்தது, சிம்புவோட 'வல்லவன்' படம். அதில் சிம்புவோட நண்பரா அவர் நடிச்சிருந்தாலும், அவருடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்துல, 'சீனு'ங்கிற ரோலில் அவர் காட்டிய காமெடி அட்ராசிட்டிதான், அவரை ரசிகர்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்தது. அதன் பிறகு, 'கோவா', 'மங்காத்தா', 'மாநாடு' என வெங்கட் பிரபுவின் படங்களிலெல்லாம் நடித்து, தனக்கென ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சுக்கிட்டார். வெங்கட் பிரபு ஏ படம் இயக்குகிறார் என்றால் அதில் தம்பி நானும் இருப்பேன் என்று எல்லா படத்திலும் பிரேம்ஜி தலைைகாட்டி விடுவார்.
45 வயதில் திருமணம்
பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு கல்யாணம் ஆகி ஒரு மகள் இருக்கும்போதும், பிரேம்ஜி மட்டும் 45 வயசு வரைக்கும் 'முரட்டு சிங்கிள்'னு சொல்லிக்கிட்டு சுற்றிக்கொண்டு இருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு எப்போது கல்யாணம்னு கேட்டு வந்த நிலையில், கடந்த வருஷம் ஜூன் மாசம், அவர் ஒரு பேங்க்ல சந்தித்த இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருத்தணியில் ரொம்ப நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவங்க திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அவருடைய அப்பா கங்கை அமரன், அண்ணன் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், வைபவ் எனப் பலரும் கலந்துக்கிட்டாங்க.
அப்பா ஆன செய்தி
இப்படி, இவர்களின் முதல் ஆண்டு திருமண நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்து கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவருடைய வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "September 4.44னு ஒரு மர்மமான போஸ்ட் போட்டிருந்தார்.
இதைப் பார்த்ததும் பலரும் அவர் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் ஒரு காமெடி மன்னனாக கலக்கி வரும் பிரேம்ஜிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். 40 வயது கடந்துவிட்டதால் பிரேம்ஜிக்கு இனி கல்யாணமே ஆகாது என்று பலர் அவரை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு அவர் திருமணம் செய்ததும், இனி இவருக்கு குழந்தை இருக்காது என்றெல்லாம் பலர் வசைப்பாடி வந்தனர். ஆனால் இப்போது இந்த தம்பதி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications