என்னை யூஸ் பண்ணிக்கிட்டு ஒதுக்கிட்டாங்க.. பல ரகசியங்களை பகிர்ந்த டிடி.. இப்படியும் நடந்திருக்காம்
சென்னை: தொகுப்பாளர் டிடி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்த நிலையில் தற்போது ஏன் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவில்லை என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் இப்போது சினிமா பக்கம் ஒதுங்கி இருக்கும் டிடி அதில் தான் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும். அந்த வகையில் டிடியும் ஒருவர். இவர் இப்போது சினிமாக்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது என்றால் தொகுப்பாளர் வேலைதான். தன்னுடைய கலகலப்பான பேச்சால் ஜாலியான நிகழ்ச்சியை கொண்டு செல்லும் இவருடைய திறமை தனித்துவமாக இருக்கும்.
பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதுவும் சின்ன வயதிலிருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கி இருந்தார். ஆரம்பத்தில் ஒரு சில சீரியலில் நடித்திருந்தாலும் இவர் தொகுப்பாளராக தான் பிரபலம் ஆகி இருந்தார். அந்த வகையில் ஜோடி நம்பர் 1, அன்புடன் டிடி, காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை இவருக்கேன்றே பார்த்த ரசிகர்கள் பலர் உண்டு.

இந்த நிலையில் சமீப காலமாக டிடி எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவில்லை. அதற்கு காரணம் டிடி உடைய காலில் அடிபட்டு இருக்கிறது என்ற செய்தியை டிடியே கூறியிருந்தார். அதனால் அவர் குணமடைந்த பிறகு மீண்டும் தொகுப்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டிடி பேட்டி ஒன்றில் விஜய் டிவி தன்னை ஒதுக்கி விட்டதாக கூறியிருந்தார். அதோடு காலில் ஏற்பட்ட பிரச்சனையால் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது. வாக்கிங் ஸ்டிக் அல்லது வீல் சேர் மூலம் தான் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
அதனாலேயே நான் அதிகமாக இப்போது வெளியே செல்வது கிடையாது. 10 ஆண்டுகளாக நிற்காமல் ஓட முடிந்த என்னால் இப்போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இந்த நோயை குணப்படுத்தவும் முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நான் இருக்கிறேன். அதனாலையே நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். எனக்கு எப்போதுமே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் சும்மா இருந்தால் பிடிக்காது. நான் எவ்வளவோ அடுத்தடுத்து படித்துக் கொண்டிருந்தாலும் வேலை எனக்கு ரொம்பவே முக்கியம்.
இத்தனை ஆண்டுகளாகவே நான் வேலை செய்த விஜய் டிவியில் என்னால் இப்போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. உட்கார்ந்து கொண்டு செய்யும்படி எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறி விட்டார்கள். அதற்கு பிறகு தான் நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் கடந்த வாரத்தில் கூட ஐந்து நாட்கள் வீட்டில் இருந்தேன் எனக்கு பைத்தியமே பிடிப்பது போன்று ஆகிவிட்டது.

அதனாலேயே நான் டியூஷன் எடுக்கலாம் என்று கூட நினைத்தேன். என்னுடைய ஃபியூச்சர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வேலையை பெர்மனண்டாக செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் நான் சினிமாவில் இனி கவனத்தை செலுத்தலாம் என்று முடிவெடுத்து விட்டேன். நான் நன்றாக இருக்கும் போது பலர் நம்மை பயன்படுத்தி இருந்தாலும் நமக்கு என்று பிரச்சனைகள் வரும்போது சிலர் கண்டு கொள்வதில்லை என்று அந்த பேட்டியில் விரக்தியில் டிடி பேசி இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications