ரியல் ஜர்னலிஸ்ட் ரீல் ஜர்னலிஸ்ட் ஆக மாறிய பிரியா பவானி... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை: இயக்குனர் சர்ஜன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், கிஷோர், மற்றும் சிரிஷ் நடிப்பில் பிளட் மணி படம் ஜி5 ஒட்டி தளத்தில் இன்று ரிலீசாகிறது.
Recommended Video
சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள பிளட் மணி படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

ரியல் ஜர்னலிஸ்ட்
ரியல் ஜர்னலிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை ஆரம்பித்த ப்ரியா பவானி சங்கர் ரீல் ஜனலிஸ்ட் ஆக இந்தப்படத்தில் கலக்கியிருக்கிறார். சுமார் 90 நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தின் டிரைலரை பார்த்த ப்ரியா பவானி சங்கர் இன் ரசிகர்கள் செம ஸ்டைல் லுக்கில் வரும் தங்கள் அபிமான நட்சத்திரத்தை படத்தில் காண ஆவலுடன் காத்திருப்பதாக கூறிவந்தனர்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் கதை
இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பல தொழிலாளர்களில் கொஞ்சம் படித்தவர்கள் ஏதேனும் நல்ல வேலையில் செட் ஆகி விடுகின்றனர். ஆனால் படிப்பறிவு குறைந்த கிராம பின்னணியைக் கொண்ட அப்பாவி தொழிலாளர்கள் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு செல்லும் அவர்கள் சரியான வேலை கிடைக்காமலும், புரோக்கர்கள் மூலம் ஏமாற்றப்படுதல், கடுமையான வேலைப்பளு போன்ற பல காரணங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப கஷ்டத்திற்காக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.

வெளிநாட்டு சட்டதிட்டம்
பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்பவர்கள் விருப்பமாக வளைகுடா நாடுகள் இருக்கிறது. ஆனால் அவ்வாறு அவர்கள் விரும்பிச் செல்லும் வளைகுடா நாடுகளில் சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாகவும் இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கிவிட்டால் மீள்வது கடினம். உயிர் போகும் சூழ்நிலை வரை ஏற்படும்.

செலிபிரிட்டிஸ் கருத்து
கிராமத்திலிருந்து குவைத்திற்கு செல்லும் இரு இளைஞர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக குவைத் அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தேதி குறிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் அவர்களை காப்பாற்ற ஒரு ஜர்னலிஸ்ட் ஆக முயற்சி எடுக்கும் பிரியா பவானி சங்கரின் போராட்டம்தான் இந்த பிளட் மணி. படத்தை பிரீமியர் ஷோ பார்த்த செலிபிரிட்டிகள் படம் அருமையாக இருப்பதாகவும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இன்னல்களை சிறப்பாக பேசுவதாகவும் கூறியிருந்தனர்.

ரீல் ஜர்னலிஸ்ட்
தூக்கில் இடுவதற்காக இருக்கும் கைதிகளை குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் காப்பாற்ற வேண்டும் என்ற சஸ்பென்ஸ் படத்திற்கு தேவையான சரியான கான்சப்ட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், மிகப் பெரிய முயற்சி எடுக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வளவு தடைகளையும் தாண்டி இறுதியில் தன் முயற்சியில் வெற்றி அடைந்தாரா..!? இல்லையா..!? என்று இன்று தெரிந்து விடும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications