அரை டவுசர்.. கையில் என்னம்மா டாட்டூ.. இப்படி வெறியேத்துனா எப்படிம்மா!
சென்னை: தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் வந்து அதன் பிறகு வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து வெற்றியும் பெற்றுள்ளனர் சிலர். அதில் தனக்கென ஒரு இடத்தையும் பெற்று விட்டார் நம்ம பிரியா பவானி சங்கர்.
அவர் சிரிப்பும் அவருடைய கண்ணும் தான் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது .பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பொண்ணு போல இருக்கிறதால் இவரை ரசிகர்கள் கொண்டாட தான் செய்கிறார்கள்.
இவருக்கு முதன்முதலில் அங்கீகாரம் கிடைத்தது புதிய தலைமுறையில் நியூஸ் தொகுப்பாளராக தான் கிடைச்சாம். அதன்பிறகு ஸ்டார் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ரெக்கை கட்டி பறந்து இருக்கிறார். இந்த சீரியலில் கோபக்கார அர்ஜூனின், மனைவியாகவே நடித்திருப்பார்.

சிரித்தாலும் அழுதாலும் சிலிர்ப்பு
இவர் ஒரு பல் டாக்டராக இந்த சீரியலில் நடித்திருப்பார். இவர் கோபப்படும்போதும் அழகாயிருக்கிறது. சிரித்தாலும் சிலிர்க்க வைப்பார்.. இதுதான் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். இந்த சீரியலில் ஆண் ரசிகர்கள் இவருக்காக இந்த சீரியலை விழுந்து விழுந்து பார்த்து குதூகலித்தார்கள். அந்த அளவுக்கு இவர் ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருந்தார்.

ரசிகர்கள் ஜாஸ்தி
கல்யாணம் முதல் காதல் வரையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஜோடி நம்பர் 1 இல் கலக்கிக் கொண்டிருந்தார். அதுபோக ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5, பிலிம்பேர் விருதுகள் தெற்கு, நடன மன்னர்கள் போன்ற சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து தான் இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சிங்கத்தின் கடைக்குட்டி
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அக்கா பொண்ணாக காலேஜ் படிக்கிற க்யூட் பொண்ணாக நடித்திருக்கிறார். இதில் பக்கா கிராமத்து பொண்ணு காலேஜ் படிக்கிற மாதிரி தான் இவருடைய அழகு கேரக்டர் எல்லாமே இருக்கும். இதுவும் ரசிகர்களுக்கு இவரை ரசிப்பதற்கு ஒரு காரணம்தான். இந்தப் படத்துக்குப் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் ஏறுமுகமாக தான் இருக்கிறதாம் .

கை நிறைய படங்கள்
நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன .பாதி படப்பிடிப்பு முடித்து வெளியாகும் தருணத்தில் தான் இந்த கோரானா லாக்டோன் வந்து சேர்ந்திருக்கிறது இருந்தாலும் இவர் இதை பற்றி கவலைப்படவில்லை. கடைக்குட்டி சிங்கத்தில் பேரழகு காட்டிய பிரியா அதற்கு பிறகு நடித்த மாஃபியா படத்தில் அருண் விஜய் உடன் சேர்ந்து நடித்தார்.. அதில் அவருக்கு போல்டான கேரக்டர்.. அசத்தியிருப்பார்.

காத்திருப்பு
அதனைத் தொடர்ந்து குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற ,பொம்மை இந்தியன் 2 என பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதன் பிறகு கல்யாண் கூட நடித்த ரீமேக் படத்தில் கூட இப்ப முடிந்துவிட்டது. அதற்கு ஓமனபெண்ணே என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். அதுவும் சீக்கிரத்தில் ரிலீசாகும் என்று சொல்லி இருக்காங்க. இப்படி பிசியா இருக்குற பிரியா லாக்டோன்ல வீட்டில இருந்துகிட்டு போட்டோவா எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணிட்டு இருக்காங்க.

ரசிக்கும் ரசிகர்கள்
இவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் எப்பவுமே குவிந்து வந்து குதூகலமாக ஆதரவு கொடுப்பது வழக்கம்.. காரணம் அதில் தெறிக்கும் பிரியாவின் பேரழகுதான். போட்டோ அப்லோட் பண்ணி ஒரு மணி நேரத்திற்குள் கமெண்டும் லைக்கும் அள்ளிக்கிட்டுப் போகுது. இப்ப கூட இவர் போட்டு இருக்கிற போட்டோஸ் பார்த்துகிட்டு ரசிகர்களுக்கு ஹார்ட்டு பீட்டு எதிரி தான் போச்சாம். விரைவில் தனது படங்கள் எல்லாம் வந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்று ஆர்வமாக உள்ளாாராம்.. ரசிகர்களும்தான்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications