அது மட்டும் அப்படியே இருக்கு.. மத்ததெல்லாம் மாறுது..பிரியா பவானி சங்கரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : வெள்ளை டி ஷர்ட்டில் இங்கே பாருங்க என கைகாட்டி இருக்கும் பிரியா பவானி சங்கரை, உற்று உற்று ரசிக்கும் ரசிகர்களின் கண்களுக்கு அவர் டீசர்ட்டில் ஒட்டியிருக்கும் இமோஜி தான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறதாம். சத்தியமா எங்க கண்ணுக்கு வேறு எதுவும் தெரியலை என்றும் அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

இந்த வாரம் நான் இப்படித்தான் இருக்கிறேன் என்று இவர் போட்டிருக்கும் கேப்ஷனை பார்த்ததும் அப்படி அங்க என்ன தான் இருக்கிறது, என்று பார்த்தால் இவர் நவரசத்தையும் கலந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டிருக்கிறார்.

ஒவ்வொரு போஸுமே அழகாக இருக்கு, ஆனால் இதன் பின்னணி என்ன என்று தான் தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பினாலும் ப்ரியா பவானி சங்கரின் அழகை தவறவிடாமல் ரசிக்கிறார்கள்.

இதை மட்டும் பாருங்க

இதை மட்டும் பாருங்க

பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் நிதானமாக பார்க்கும்படி பிரியா பவானி சங்கர் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. இவருடைய வீடியோவில் அப்படி என்னதான் சிறப்பாக போட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதுவுமில்லாமல் அவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸை மிஸ் பண்ணாமல் பார்த்து ரசிக்கின்றனர். அதுவும் நாம் மட்டும் பார்த்தால் போதாது என்று அப்படியே அதை ஷேர் செய்தும் வருகின்றனர். இதனால் தற்போது இந்த வீடியோதான் இன்ஸ்டாகிராமில் செம வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்களின் ஆதரவு அதிகம் தான்

ரசிகர்களின் ஆதரவு அதிகம் தான்

சீரியலை விட்டு வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தாலும் தற்போது அங்கும் கொடி கட்டி பறந்து வரும் பிரியா பவானி சங்கரை சீரியல் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி வருகின்றனர். இவர் எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று ஆர்வமுடன் அவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவர் முதன்முதலில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். இந்த சீரியலில் அவருடன் நடித்த நடிகருக்கும் ஜோடிப்பொருத்தம் அவ்வளவு சூப்பராக செட் ஆனதால் ரசிகர்கள் இவரை நன்றாகவே ஏற்றுக்கொண்டனர். அதுவும் க்யூட்டான அழகால் கண்ணாலேயே நடிப்பு முழுவதையும் வெளிக்காட்டி விடுவதால் இவருடைய கண்ணுக்கு ரசிகர்களிடம் செம மதிப்புதான். அதனால்தான் சீரியலில் கண்ணழகி என்று இவருக்குப் பெயரையும் கொடுத்திருந்தனர்.

அந்த... சிரித்த முகம் இருக்கே....

அந்த... சிரித்த முகம் இருக்கே....

இவர் சீரியல் நடிகை ஆவதற்கு முன்பே பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவருடைய அழகான தமிழ் உச்சரிப்பையும் கொஞ்சி கொஞ்சி பேசும் சிரித்த முகத்தையும் பிடித்துப் போனதால் தான் இவருக்கு சீரியலில் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் இவர் வெள்ளித்திரைக்கு போனாலும் அங்கேயும் நாங்கள் சப்போர்ட் கொடுக்கிறோம் என்று இவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.முதலில் வெள்ளித்திரையில் துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவருடைய ரசிகர்களுக்காக அடிக்கடி இவர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது வழக்கம் தான்.

காதல் கண்ணை மறைக்குது

காதல் கண்ணை மறைக்குது

அந்த மாதிரி தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் பலர் காதல் மழை பொழிகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் பக்கம் பக்கமாக கமெண்டை காதல் கவிதையாக தீட்டியிருக்கிறார். அதில் "உங்கள் கண்கள் இரவு வானத்தில் நட்சத்திரங்களை போல பிரகாசிக்கின்றன. நான் அதை உற்று பார்க்கும்போது நான் உயர உயர்ந்து இருப்பது போல் உணர்கிறேன். உங்கள் மீதான என் காதல் தூய்மையானது, மற்றும் உண்மையானது. நான் உன்னை நினைப்பதை நிறுத்தவே இல்லை. நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் உங்கள் குரலின் சத்தம் என் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. ஏனென்றால் என்னுடையது எனக்கு மட்டுமே தெரியும். என்றென்றும் ஒவ்வொரு கணமும் உன்னை நேசிப்பதாக நான் உறுதி அளிக்கிறேன். மற்ற அனைத்தும் நொறுங்கும்போது நான் ஒருபோதும் செய்யமாட்டேன். கண்களைப் போல நான் உங்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் உங்கள் கவசம். உங்களைப்போலவே அதிர்ஷ்ட வசீகரம் என்று அளந்து விட்டிருக்கிறார்.

அது இப்போ வேண்டாமே

அது இப்போ வேண்டாமே

இப்படியே பலர் இவருக்கு காதல் தூது விட்டு இருந்தாலும், இவர் தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லையாம். இப்போதுதான் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்து தன்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்குள் இது எல்லாம் எதுக்கு என்று கலக்கலாக தன்னுடைய சிரிப்பாலே திருமணத்தை பற்றி கேட்பவர்களுக்கு பதில் அளித்திருக்கும் இவர், இந்த வாரம் சந்தோசமாக இருந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு முகத்தில் அத்தனை எக்ஸ்பிரஷனையும் காட்டி ரீல்ஸ் வீடியோ போட்டிருக்கிறார். இந்த வீடியோவில் எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+