அந்த கண்ண பாருயா..கலரைப் பாருயா! GBUஆல் தூக்கத்தை கெடுக்கும் பிரியா வாரியர்.. மீண்டும் ட்ரெண்ட்!
சென்னை: குட் பேட் அக்லி படத்தின் மூலம் மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் அஜித்குமார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர். இவரை எங்கோ பார்த்தது மாதிரி இருக்கிறதா? 2017ல் ஒரு அடர் லவ் படத்தில் கண்ணை சிமிட்டியதன் மூலம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து அவர், தற்போது தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலின் மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
பட்டங்களைக் கொண்டு தன்னை அழைக்கக் கூடாது என அஜித் குமார் கூறியிருந்தாலும் 'அல்டிமேட் ஸ்டார்' 'தல' என கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். ஆனாலும் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சொதப்பியதால் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.
கடந்த மாதம் வெளியான விடாமுயற்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்து நிலையில் ரசிகர்களின் கடுமையான எதிர் விமர்சனத்தை சந்தித்தது. சந்தேகமே இல்லாமல் அந்த படம் தோல்வி படம் தான். இந்த நிலையில் ஆதி ரவிச்சந்திரன் உடன் இணைந்தார் அஜித் குமார்.

ட்ரிபிள் ஏ படத்தின் மூலம் சொதப்பினாலும் மார்க் ஆண்டனி படம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. இதை அடுத்து அதே ஸ்டைல் படம் செய்ய வேண்டும் என நினைத்த அஜித்குமார் ஆதிக் உடன் இணைந்தார், மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் 10ஆம் தேதி வெளியானது. அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது.
படம் வெளியான முதல் நாளில் இருந்தெ ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாத நிலையில் இரண்டு மாதங்களில் இரண்டு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இந்த படத்தில் பல பழைய ஹிட் பாடல்கள் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா தாரேன் உள்ளிட்ட பாடல்கள் மீண்டும் யூட்யூபில் ரசிகர்களால் மீண்டும் பார்க்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் விட குறிப்பிட தகுந்த விஷயம் என்றால் அது பிரியா பிரகாஷ் வாரியர் தான். தற்போதைக்கு அவர் தான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறார்.
தொடர்ந்து அவரைப் போலவே உடை அணிந்து பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பெருமை எல்லாம் சிம்மரனையே சேரும். அவர் பாடலை தான் பிரியா வாரியர் மீண்டும் ரீ கிரியேட் செய்திருக்கிறார். சிம்ரனை போலவே அவரும் நடனமாடுகிறார் என பலரும் புகழ்ந்து வருகின்றனர். பிரியா வாரியர் என்ற பெயரை எங்கோ கேட்டது போல இருக்கிறதா? ஆம் 2017ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர்.
அந்த படத்தில் ஒரு சில நொடிகளே வரும் ஒரு ஷாட் மூலம் உலக அளவில் பிரபலமானவர். ஒரு புருவத்தை தூக்கி, கைகளால் சுடுவது போல அவர் செய்த ஆக்சன் சமூக வலைதளங்களை புரட்டி எடுத்தது. தொடர்ந்து அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். ஆரம்பத்தில் அந்த படத்தில் அவருக்கு உரிய முக்கியத்துவம் இல்லாத நிலையில் அந்த குறிப்பிட்ட சீன் மூலம் பிரபலமாகவே படத்தில் அவருக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது/.
பாலிவுட் பிரபலங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பிரியா வாரியரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்தனர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது இந்த பாடலை வைத்து மீண்டும் அவரை ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள். இதற்கிடையே குட் பேட் அக்லி படத்தில் தனது கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரியா வாரியர் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு படக்குழுவிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications