GBUல செம்மயா பண்ணிட்டீங்கமா..வாழ்த்தி பேசிய விஜய்! கலங்கி நின்ற பிரியா வாரியர்! காத்திருந்த ட்விஸ்ட்
சென்னை: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் மூலம் மீண்டும் சென்சேஷனல் இன்ஸ்டாகிராம் பிரபலமாக திரும்பி இருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் 'தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு நடனமாடி இளசுகளின் மனதை பறித்தவரை விஜய் பாராட்டுவது போல நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ வெளியிடப்பட்டது. அப்போது திடீரென கண்கலங்கி நின்றார் பிரியா வாரியர். ஆனால், அதற்கு பின்னர்தான் ட்விஸ்டே காத்திருந்தது.
அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் 10ஆம் தேதி வெளியானது. அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படம் இதுவரை சுமார் 250 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வந்த நிலையில் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் போல இந்த படத்திலும், பல பழைய ஹிட் பாடல்கள் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா தாரேன் உள்ளிட்ட பாடல்கள் யூட்யூபில் ரசிகர்களால் மீண்டும் பார்க்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் விட குறிப்பிட தகுந்த விஷயம் என்றால் அது பிரியா பிரகாஷ் வாரியர் தான். தற்போதைக்கு அவர் தான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறார்.
தொடர்ந்து அவரைப் போலவே உடை அணிந்து பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பெருமை எல்லாம் சிம்ரனையே சேரும். அவர் பாடலை தான் பிரியா வாரியர் மீண்டும் ரீ கிரியேட் செய்திருக்கிறார். சிம்ரனை போலவே அவரும் நடனமாடுகிறார் என பலரும் புகழ்ந்து வருகின்றனர். இதனால் மீண்டும் அவர் இணையத்தில் ஃபேமஸாகி வருகிறார்.
இந்த நிலையில் பிரியா பிரகாஷ் வாரியரை விஜய் வாழ்த்துவது போன்று வீடியோ ஒன்று நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டதால் அவர் கண் கலங்கினார். சென்னையில் அப்ளிகேஷன் ஒன்றின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரியா வாரியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது திரையில் விஜய்," ஹாய் குட் பேட் அக்னி படத்துல சூப்பரா பண்ணிட்டீங்கமா.. ஆனா, சிம்ரன் ஓட ஆல் டைம் பெஸ்ட்ல இன்னொரு பாட்டு இருக்கு. அந்த பாட்டுக்கு ஸ்டெப் போட்டு காட்டுங்க" என பேசினார்.
இதனால் அதிர்ச்சியாகி நின்ற பிரியா பிரகாஷ் வாரியர், " இன்னொரு தடவை அதை பிளே பண்ணுங்க" என கேட்டார். மீண்டும் ஒளிபரப்பப்பட்டபோது அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து கண் கலங்கி நின்றார். தொடர்ந்து அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என தொகுப்பாளர் கூற," இதெல்லாம் ரொம்ப தப்பு.. என் கண்ணுல இருந்து தண்ணி வருதுங்க" என கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில் அந்த வீடியோ தனது கட்சி நிகழ்ச்சியில் விஜய் பேசியது. அதை ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications