பிரியங்காவின் திடீர் வருகையால் கண்கலங்கி அழுத குழந்தைகள்...இது வேற லெவல் அன்புதான்
சென்னை: விஜய் டிவியில் மீண்டும் தொகுப்பாளராக பிரியங்கா களமிறங்கியிருக்கிறார்.
பல நாட்களுக்குப் பிறகு பிரியங்காவை பார்த்த குழந்தைகள் குதூகலித்து இருக்கின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளர்
தொகுப்பாளர்கள் என்றதுமே ரசிகர்களின் மனதில் ஒரு சிலர் தொகுப்பாளர்களின் முகம் நினைவுக்கு வரும் அந்த வகையில் பலருக்கும் பரிச்சயமான பிரியங்காவின் முகம்தான் பலருடைய நினைவில் வந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஒரு தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் மூலமாக மேலும் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். தன்னுடைய அல்டிமேட் என தனி திறமையான விளையாட்டால் விளையாட்டுக்கு மட்டும் சுவாரசியம் சேர்க்காமல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய அறிமுகத்தை பார்த்த இவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் அதிகமாக பயந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இவருடைய பெயர் கெட்டு போய்விடும் என்பதுதான் அவர்களுடைய கருத்தாக இருந்தது. ஆனால் என்னதான் ரியாலிடி ஷோவாக இருந்தாலும் அதிலும் நான் நானாக இருப்பேன் என்று கெத்தாக நடந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்து இருந்தார். தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இவர் ரன்னர் ஆக அந்த நிகழ்ச்சியில் ஜெயித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால் இவர் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது பலமுறை புலம்பி வந்தார். இந்த நிலையில் தற்போது வெற்றி பெற்று திரும்பிய பிரியங்கா மீண்டும் அந்த சூப்பர் சிங்கர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது பிரியங்காவிற்கு மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

குழந்தைகளை கவர்ந்த அன்பு
தற்போது பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா அறிமுகமானதும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களான குழந்தைகள் ஆனந்தக் கண்ணீர் விட்டு பிரியங்காவை வரவேற்று இருக்கிறது. பல நாட்களுக்கு பிறகு இவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி சென்று கட்டி அணைத்துக் கொள்ளுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுதான் பேரன்பு என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். குழந்தைகளோடு குழந்தையாக மாறிய பிரியங்காவின் லேட்டஸ்ட் நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications